இவ்வாண்டு வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாடி செல்வோரின் எண்ணிக்கை 330,000 ஆக அதிகரிக்கும் சாத்தியம்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல் நெருக்கடிகளினால் புலம்பெயர்ந்து தொழில் தேடுவதில் இலங்கையர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இவ்வருட இறுதிக்குள் வௌிநாட்டு தொழில்வாய்ப்பினை நாடி செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 330,000 ஆக அதிகரிக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
"இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான தேவையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் 330,000 வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவோம்" என்று கடந்த சனிக்கிழமை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
அதற்கமைய, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) சிரேஷ்ட முகாமையானது, அதன் வருடாந்த வணிகத் திட்டத்தை மீளாய்வு செய்து திருத்தியுள்ளது.
இவ்வாண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி வரை 174,584 இலங்கையர்கள் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து தொழில்வாய்ப்புக்காக வௌிநாடுகளுக்கு சென்றுள்ளனர். எனினும் உண்மையில் வௌிநாட்டு தொழில்வாய்ப்பினை நாடி வௌிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை அதையும் விட அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. SLBFE இல் பதிவு செய்து வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இருப்பினும், உண்மையான வெளிப்புற தொழிலாளர் இடம்பெயர்வு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் தொழில்வாய்ப்பினை பெற புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 300,000 மாத்திரமே கடந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு 300,703 பேர் தொழில்வாய்ப்பு நாடி வௌிநாடு சென்றுள்ளனர்.
புலம்பெயர் தொழிலாளர் இடம்பெயர்வு 300,000 ஐத் தாண்டிய ஒரு நிகழ்வை மட்டுமே இலங்கை கண்டுள்ளது. 2014 இல், நாடு 300,703 வெளிநாட்டில் தொழிலாளர் இடம்பெயர்வுகளை பதிவு செய்தது.
2021 ஆம் ஆண்டு, 117,952 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக நாட்டை விட்டு வெளியேறினர், இதில் சுமார் 78,000 பேர் புதிதாக வேலைவாய்ப்பை நாடி செல்பவர்கள் ஆவர். பெரும்பாலான இலங்கையர்கள் பயிற்சியற்ற மற்றும் வீட்டுப்பணி சார் (வீட்டுப்பணிப்பெண்கள்) போன்ற துறைகளுக்கே சென்றுள்ளனர்.
கட்டார், சவுதிஅரேபியா, குவைத், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் போன்ற நாடுகள் அதிகமாக இலங்கையர்கள் நாடி செல்லும் நாடுகளாக உள்ளன. 80 வீதமானவர்கள் அந்நாடுகளுக்கு செல்கின்றனர். அண்மையில் அரசாங்கம் அரசதுறை ஊழியர்கள் வௌிநாட்டி தொழில் வாய்ப்பினை பெறும் வகையில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தியது. அத்துடன் பொதுத்துறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான தேவையை கண்டறியும் ஒரு கணக்கெடுப்பையும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தொடங்கியுள்ளது.
ஜூன் மாதத்தில் 274 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்த பின்னர், ஜூலையில் பணியாளர்கள் அனுப்பும் பணம் அதிகரித்துள்ளது என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். கவர்ச்சிகரமான அந்நிய செலாவணியைப் பெறுவதற்காக புலம்பெயர் தொழிலாளர்கள் தாம் சம்பாதிக்கும் பணத்தில் பெருந்தொகையான பணத்தை உண்டியல் மற்றும் ஹவாலா போன்ற உத்தியோகப்பூர்வமற்ற முறைகளில் அனுப்ப முற்படுகின்றனர். இதனால் ஆண்டுக்கு ஆண்டு 51 வீதத்தால் வீழ்ச்சியடைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Dailymirror