இலங்கையில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் இன்றைய நிலை!

இலங்கையில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் இன்றைய நிலை!

வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குமாறு கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களை ப்ரெண்டிக்ஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதுடன் கம்பனியையும் மூடியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் இயங்கிய ப்ரெண்டிக்ஸ் நிறுவனமே இவ்வாறு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வழமையாக ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்குவதற்கு இரு தினங்களுக்கு முன்பாக அக்கொடுப்பனவு வழங்கப்படாது என்று முகாமை ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. தொழிற்சாலை நட்டத்தில் இயங்குவதால் இத்தீர்மானம் எட்டப்பட்டதாக முகாமை தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஊழியர்கள் மறுநாள் முழு கொடுப்பனவையும் வழங்குமாறு கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 30ம் திகதி மாலையில் ஊழியர்கள் வீடு திரும்பிய பின்னர் குறுந்தகவல் மூலமாக தொழிற்சாலை மூடப்பட்டதாக முகாமை ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.

தொழில் இல்லாமல் போகும் என்ற அச்சத்தில் சிலர் ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படாமையை ஏற்றுக்கொள்வதாக முகாமைக்கு அறிவித்துள்ள நிலையில் பணிப்பகிஷ்கரிப்பு செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொண்டாக கடிதம் வழங்குமாறு முகாமை அவர்களுக்கு அறிவித்துள்ளது. எனினும் ஊழியர்கள் இதனை நிராகரித்துள்ளது.

நேற்று, முதலீட்டு ஊக்குவிப்புச்சபை அதிகாரிகள், வெளிநாட்டு முதலீடுகளை கண்காணிக்கும் அரசு அமைப்பினர், தொழிற்சாலையில் நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் குழுவை சந்தித்து கலந்துரையாடியதையடுத்து தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அழைப்பதற்கான உடன்படிக்கை எட்டப்பட்டது. ஆனால் அவர்கள் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே ஊக்குவிப்புக் கொடுப்பனவில் பாதி வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளில் உள்ள ஊழியர் சபைகள் என்று அழைக்கப்படுபவை தொழிலாளர் அமைப்புகள் அல்ல. நிர்வாகத்தால் கட்டுப்படுத்தப்படும் தேர்தல்கள் மூலம் அவை அமைக்கப்படுகின்றன, மேலும் அவை பொதுவாக நிறுவனங்களுக்கு சார்பாகவே செயற்படும்.

Brandix நிறுவனமானதுதெற்காசியாவில் உள்ள மிகப்பெரிய பன்னாட்டு ஆடை நிறுவனங்களில் ஒன்றாகும், இலங்கையில் 23 தொழிற்சாலைகளில் 53,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியாவில் நான்கு நிறுவனங்களும பங்களாதேஷில் ஒன்றுமாக நிறுவனங்கள் உள்ளன. Owler.com இணையதளத்திற்கு அமைவாக படி, நிறுவனத்தின் வருமானம் 2021 டிசம்பர் தொடக்கம் $782 மில்லியனில் இருந்து 4.9 சதவீதம் அதிகரித்து ஓகஸ்ட் 2022ல் $820 மில்லியனாக உயர்ந்துள்ளது.

 

கட்டளைகள் இல்லாமையினால் செப்டெம்பர் 2 தொடக்கம் 10 நாட்களுக்கு கொக்கல நிறுவனம் மூடப்பட்டிருந்தது.

Brandix Essential இல் பணியாற்றும் ஊழியர்கள் ஒருவர் உலக சோஷலிஸ வலைத்தளத்திற்கு கருத்து தெரிவித்தபோது நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினை சமாளிக்க முடியாமல் தடுமாறும் நிலையில் இம்முறை ஊக்குவிப்பு கொடுப்பனவு கிடைத்தால் எனது பிள்ளைகளுக்கு பாடசாலை செல்வதற்கான காலணி மற்றும் புத்தகங்களையும் வாங்கலாம் என்று நினைத்தேன். கொடுப்பனவு வழங்கப்படாது என்றவுடன் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். கம்பனி மூடப்பட்டதுடன் வேலையை இழந்துவிடுவேன் என்று பயந்தேன் என்று தெரிவித்திருந்தார்.

போனஸ் வெட்டுக்கு எதிராக உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார்: "நாங்கள் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் பெரும் சிரமங்களுடன் வாழ்கிறோம். எனக்கு இரண்டு பள்ளிக் குழந்தைகள் உள்ளனர். போனஸுடன் அவர்களுக்கான காலணிகளையும் பள்ளிப் புத்தகங்களையும் வாங்கித் தருவேன் என்று நம்பினேன். இந்த முறை போனஸ் முழுவதுமாக வழங்கப்பட மாட்டாது என்று கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்தேன். தொழிற்சாலை மூடப்பட்டபோது நாங்களும் வேலை இழப்போம் என்று நினைத்தேன் என்றார்.

உற்பத்தி பிரிவு ஊழியர்கள் மாதாந்தம் 28,000 ரூபா ($US106) சம்பளமாக பெறுகின்றனர். அதேவேளை, பராமரிப்பு பிரிவு ஊழியர்கள் மாதாந்தம் 35,000 ரூபாவை சம்பளமாக பெறுகின்றனர். முழு கொடுப்பனவையும் நிறுவனம் வழங்காமையானது மிகவும் தவறான செயலாகும். நிறுவனம் நடடத்தில் ஓடுவதாக முகாமை தெரிவிக்கிறது. ஆனால் கடந்த காலங்களில் அவர்கள் எவ்வளவு லாபம் உழைத்தார்கள் என்று எங்களுக்குத் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு நிறுவனம் பூட்டப்படுவது என்பது இலங்கையிலும் சர்வதேசத்திலும் உள்ள ஆடைத் தொழிலாளர்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும்.

Unichela Garment ஐச் சேர்ந்த ஒரு ஊழியர் உலக சோஷலிஸ இணையதளத்திடம் கருத்து தெரிவிக்கையில் "தங்களின் தினசரி வேலை இலக்குகள் சாத்தியமில்லாத அளவிற்கு சமீபத்தில் உயர்வடைந்துள்ளதாக கவலை வௌியிட்டுள்ளார். இலக்குகள் அடையப்படாவிடின் அல்லது உற்பத்தியின் போது ஏதேனும் தவறு செய்தால், நிர்வாகம் தவறை ஏற்றுக்கொள்வதற்கான கடிதத்தை ஊழியரிடம் கோருகிறது. அத்தகைய மூன்று கடிதங்களுக்குப் பிறகு, அவர் பணிநீக்கம் செய்யப்படுகிறார்."

"சமீபத்தில் உற்பத்தித் தலைவர் தனது இலக்குகளை பதிவு செய்ய மறந்தார் என்ற காரணத்தினால் ஒரு மேற்பார்வையாளர் பணி இலக்குகளைக் காட்டும் பலகையில் கண்ணாடியை உடைத்தார், இதனால் தயாரிப்புப் பிரிவு தலைவருக்கு முகத்தில் காயமேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இலக்குகளை அடைவதற்காக தேநீர் இடைவேளை மற்றும் உணவு இடைவேளையின் போதும் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Unichela MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது, இது 17 நாடுகளில் 93,000 தொழிலாளர்களையும், இலங்கையில் 69,000 தொழிலாளர்களையும் கொண்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், இலங்கை எஸ்குவெல் நிறுவனம் KFTZ, யக்கல, ஜாஎல ஏகல மற்றும் கேகாலை ஆகிய இடங்களில் உள்ள தனது தொழிற்சாலைகளை மூடியது. ஜூலை மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கிடையே, Aura மற்றும் Trend Setters ஆகியவை கொக்கல சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பெலியத்தவில் உள்ள மூன்று தொழிற்சாலைகளை தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் மூடிவிட்டன. இவ்வாறு தொழிற்சாலைகள் மூடப்பட்டமையினால் சுமார் 7,500 பேர் வேலை இழந்துள்ளனர்.

 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆடை ஏற்றுமதி 30 வீதத்தால் குறையும் என இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் (SLAEA) எச்சரித்துள்ளது. இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கான பிரதான சந்தைகளான அமெரிக்காவும் ஐரோப்பாவும் பணவீக்க அழுத்தத்தின் கீழ் உள்ளதால் அவை மந்தநிலைக்குள் தள்ளப்படுவதாக அதன் தலைவர் இந்திக லியனஹேவகே தெரிவித்தார். "உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மந்தநிலையிலான பொருளாதார வளர்ச்சியானது அடுத்த ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்றுமதியை பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தினால் அண்மையில் விதிக்கப்பட்ட பெருநிறுவன வரிகள் மற்றும் ஏற்றுமதி மீதான வரியை 14 வீதத்தில் இருந்து 30 வீதமாக அதிகரித்தமை, ஏனைய ஆடை ஏற்றுமதி நாடுகளில் குறிப்பாக பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் ஆகியவற்றிலிருந்து அதிகரித்துள்ள போட்டி என்பன பெரும் அச்சுறுத்தலாயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயர்ந்து வரும் மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் பற்றாக்குறை, தேவை வீழ்ச்சி மற்றும் கட்டளைகள் இல்லாமை மற்றும் கொவிட்-19 பரவல், உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ தாக்குதல் மோசமடைந்துள்ளமை, ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மீது சுமத்துவதன் மூலம் இரக்கமின்றி செயற்படுகின்றனர்.

2020ம் ஆண்டு தரவுகளுக்கமைய, அண்ணளவாக 350,000 பேர் நேரடியாகவும் 700,000 பேர் மறைமுகமாகவும் ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளில் பணியாற்றி வருமானமீட்டுகின்றனர். சர்வதேச தொழிலாளர் தாபனம் 2020ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வௌியிட்ட அறிக்கைக்கு அமைவாக ஆசியாவில் ஆயிரக்கணக்கான ஆடைத் உற்பத்தித் தொழிற்சாலை ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளனர்.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக தற்போதைய விக்கிரமசிங்க அரசாங்கம் மேற்கொள்ளும் சிக்கன நடவடிக்கைகள் உழைக்கும் வர்க்கத்தை மென்மேலும் கஷ்டத்தில் தள்ளியுள்ளது. குறிப்பாக தொழிலாளர் மீதான வரி விதிப்பு, அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம், அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல் போன்ற செயற்பாடுகளும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் தொழிலாளர் சங்கம் (FTZGWU) உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஏற்கனவே எஸ்குவெல் நிறுவனத்துடன் பணிநீக்கத்துக்கு ஒத்துழைத்துள்ளதுடன் குறைந்த இழப்பீட்டுத் தொகையுடன் தன்னார்வ ஓய்வு என அழைக்கப்படுவதை ஏற்க தொழிலாளர்களை கட்டாயப்படுத்துகின்றமை கவனிக்கப்படவேண்டியது ஆகும்.

எதிர்கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள FTZGWU, வர்த்தக, தொழில்துறை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான தொழிலாளர் சங்கம் ஆகியவை கொவிட் தொற்றின் போது தொற்றுநோய்களின் போது அரசாங்கம் மற்றும் வேலைகள் மற்றும் ஊதியங்கள் மீதான பல்தேசிய கம்பனிகளின் செயற்பாடுகளை ஆதரித்தன. இந்நிறுவனங்கள் தொழிலாளர்களின் உரிமைகள் அல்ல, இலாபங்களை நிலைநிறுத்தும் பெருவணிகத்தின் கருவிகளாகவே செயற்படுகின்றன.

Aura தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு தொழிலாளி உலக சோஷலிச இணையதளத்திற்கு கருத்து வௌியிடுகையில், "வேலை இழந்த பிறகு வாழ்வது மிகவும் கடினம். பணி நீக்கம் மற்றும் ஊதிய நிலுவை வழங்காதது குறித்து தொழில் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்தாலும் விசாரணை இன்னும் முன்னெடுக்கப்படவில்லை. குறைந்த வேதனத்தில் ஏனைய தொழிலாளர்கள் வெவ்வேறு தற்காலிக இடங்களில் பணியாற்றுகின்றனர்," என்றார்.

"முதலாளித்திவ முறையின் கீழ் தொழிலாளர்கள் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. நாம் எமது உரிமைக்காக போராட வேண்டும். அதற்கு நாம் ஒழுங்கமைக்கப்படவேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார்

தொழிலாளி சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) முயற்சியில் அண்மையில் உருவாக்கப்பட்ட கொக்கல சுதந்திர வர்த்தக வலய செயற்பாட்டுக்குழு உறுப்பினரான அவர், கொக்கல மற்றும் அனைத்து சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பிற பணியிடங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலைகள் மற்றும் ஊதியங்களைப் பாதுகாப்பதற்கும் மேம்பட்ட வேலை நிலைமைகளுக்காகப் போராடுவதற்கும் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஒழுங்கமைக்க சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

World Socialist Website

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image