தந்தைமாருக்கும் 100 நாட்கள் மகப்பேற்று விடுமுறை

தந்தைமாருக்கும் 100 நாட்கள் மகப்பேற்று விடுமுறை

ஜோன் கீல்ஸ் குழுமத்தில் பணியாற்றும் ஆண் பெண் ஊழியர்களுக்கு சமமான மகப்பேற்று விடுமுறை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கமைய நேற்று (02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜோன் கீல்ஸ் குழுமத்தில் பணியாற்றும் அனைத்து ஆண் பெண் ஊழியர்களுக்கும் சமமான முறையில் மகப்பேற்று விடுமுறை வழங்கப்படுகிறது.

குழந்தை பிறக்கும் போதோ அல்லது குழந்தையை தத்தெடுக்கும் போதோ குழந்தையின் தாய்க்கு வழங்கப்படும் 100 நாள் மகப்பேறு விடுமுறை அதேபோல் நடைமுறையில் இருக்கும். அதேநேரம் தந்தைக்கு இதுநாள் வரை வழங்கப்பட்ட 5 நாட்கள் விடுமுறையானது 100 நாட்களுக்கு அதிகரிப்பட்டுள்ளமையே இதன் விசேட அம்சமாகும்.

ஒரு குழந்தையைப் பராமரிப்பதில் தாய் மற்றும் தந்தை இருவருக்கும் பொறுப்புகள் இருப்பதை உணர்ந்து, சமத்துவத்தை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. மேலும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குழந்தை பராமரிப்பு தொடர்பான தனிப்பட்ட சூழ்நிலைகள் இருப்பதால், இந்த 100 நாள் விடுமுறையை நெகிழ்வாக எடுத்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஜோன் கீல்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

பெண்கள் மகப்பேற்று விடுமுறையை கருத்திற்கொண்டு பெண்களை பணியமர்த்தும்போது அவர்கள் வித்தியாசமாக நடத்தப்படுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதும் மகப்பேற்று விடுமுறைசமமாக வழங்கப்படுவதன் மற்றொரு நோக்கமாகும். ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முக்கிய குறிக்கோள்களில், 5 ஆண்டுகளுக்குள் எங்கள் ஊழியர்களில் பெண்களின் விகிதாச்சாரத்தை 40% ஆக அதிகரிப்பதும் ஒன்றாகும். இந்நிலையில் எமது குழுமத்தில் பணியாற்றும் அனைத்து அங்கத்தினர்களும் எதிர்நோக்கும், அனைத்து வகையான பாலின அடிப்படையிலான அநீதிகளையும் களைவது கட்டாயம் என்று நாங்கள் நம்புகிறோம் என்கிறார் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் கிருஷன் பாலேந்திரா.

ஜோன் கீல்ஸ் குழுமம் குழுமத்திற்கு வௌியே பணியாற்றும் குழும உறுப்பினர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்ததும் அல்லது தத்தெடுக்கப்பட்டதும் வழங்கப்படும் 100 நாட்கள் விடுமுறையானது பேருதவியாக இருக்கும் என்று தாம் நம்புவதாகவும், இந்நெகிழ்வுத் தன்மையானது வேலை செய்யும் பெண்கள் அவர்களுடைய மகப்பேற்று விடுமுறையின் பின்னர் மீண்டும் சேவைக்கு செல்வதற்கான வாய்ப்புக் கிடைப்பதுடன் அதனூடாக சமூகத்தில் பல்லினத்தன்மை, சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடரும் என்று குழுமம் நம்புகிறது.

ஜான் கீல்ஸ் குழுமம் ONE JKH வியாபார நாமத்தின் கீழ் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துதல், தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல், விநியோகச் சங்கிலி மற்றும் சமூகங்களில் பெண்களுக்கு அதிகாரமளித்தல், குறைபாடுகள் உள்ளவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் மூன்றாம் பாலின சமூகத்திற்கு சமத்துவம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறதுடன் வாய்ப்புகள் போன்றவற்றை உறுதி செய்வதன் மூலம் பாலின சமத்துவத்தை அடைய குழு உறுதிபூண்டுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப் பெரிய நிறுவனமான John Keels Holdings plc (JKH) இன் நிர்வகிக்கப்படும் நிறுவனம். 7 பன்முகப்படுத்தப்பட்ட தொழில் துறைகளில் 70 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு முன்னணியில் உள்ள JKH 14,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பயன்படுத்துகிறது மற்றும் LMD சஞ்சிகையால் 16 ஆண்டுகளாக இலங்கையில் மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

7 பன்முகப்படுத்தப்பட்ட தொழில் துறைகளில் 70 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு முன்னணியில் உள்ள JKH 14,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பயன்படுத்துகிறது மற்றும் LMD சஞ்சிகையால் 16 ஆண்டுகளாக இலங்கையில் மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதார மன்றத்தின் நிரந்தர உறுப்பினரும், ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்தத்தில் அங்கத்துவம் பெற்றதுமான ஜோன் கீல்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையினூடாக மற்றும் சமூக தொழில்முனைவோர் முன்முயற்சியின் மூலம் "நாளைய தினத்துக்கு தேசத்தை வலுப்படுத்துவோம்" என்ற தொனிப்பொருளில் செயற்படுத்துவதுடன் Plasticcycle சமூக செயற்பாட்டு திட்டத்தினூடாக இலங்கையில் பிளாஸ்டிக் மாசை குறைப்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - தெரண

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image