சுற்றுலா வீசாவில் ஓமான் அழைத்து செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும் இலங்கைப் பெண்கள்!

சுற்றுலா வீசாவில் ஓமான் அழைத்து செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும் இலங்கைப் பெண்கள்!

வௌிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி ஓமான் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்கள் முகவர் அலுவலகங்களில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு தொழில்வழங்குநர்களின் தேவைக்கேற்ப தெரிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வௌியாகியுள்ளன.

அழகு மற்றும் வயதுக்கு ஏற்ப இப்பெண்களுக்கு விலை தீர்மானிக்கப்பட்டுள்ளனர் என்றும் அழகான உருவ அமைப்பைக் கொண்ட இளம் வயது பெண்கள் ஒரு மில்லியன் வரை விலை கொடுத்து பாலியல் அடிமைகளாக கொண்டு சென்றுள்ளனர் என்றும் தகவல்கள் வௌியாகியுள்ளன.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொகை கொடுத்து இப்பெண்கள் அழைத்து செல்லப்பட்டபோதிலும் அப்பெண்களுக்கு மிகக்குறைந்த அளவு தொகை மாத்திரமே கொடுக்கப்பட்டுள்ளது என்று குறித்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு உத்தரவிடப்பட்டு ஓமானுக்கு சென்ற குற்றவியல் திணைக்களத்தின் ரகசிய அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

டுபாய் நாட்டுக்கு சுற்றுலா வீசாவில் அழைத்துச் செல்லப்பட்டு அல்புரேஹி தேச எல்லையினூடாக பஸ்ஸின் ஊடாக ஓமான் அழைத்து செல்லப்பட்டு இப்பெண்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில முகவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வீசாவில் அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து ஓமான் அழைத்து செல்ல திட்டமிடுகின்றனர்.

இவ்வாறு ஆட்கடத்திலில் ஈடுபடும் நபர்கள் குறித்த பெண்களை முகவர் நிலையங்களுக்கு அழைத்து செல்லும் போதே பல பெண்கள்கள் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்படுகின்றனர். முகவர்களிடம் அழைத்து செல்லப்பட்ட பின்னர் குறித்த பெண்களுடைய கடவுச்சீட்டுகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பறிக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்கள் தொடர்பான விபரங்களுடன் வீடியோக்கள் தொழில்வழங்குநர்களுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் பெண்களை பார்வையிட அழைக்கப்பட்டுள்ளனர். காட்சிப்படுத்தலில் தெரிவு செய்யப்பட்ட பெண்களை வாகனங்களில் அழைத்து செல்லப்படும் போது வாகன சாரதிகளும் துஷ்பிரயோகப்படுத்துகின்றனர் என்றும் தகவல்கள் வௌியாகியுள்ளன.

இவ்வாறு விலை கொடுத்து வாங்கப்படும் பெண்கள் தமது உடமைகளாக கருதப்பட்டு அதிக வேலைகள் வழங்கப்படுவதுடன் அவர்களின் உறவினர்களின் வீடுகளுக்கும் சேவைக்காக அனுப்பப்படுகின்றனர், அத்துடன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கும் உட்படுத்தப்படுகின்றனர். இவர்களிடம் இருந்து தப்பிச் செல்லும் பெண்கள் அந்நாட்டில் உள்ள வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் வீட்டுப் பணியின் கீழ் பதிவு செய்யப்படாமையினால் அவர்களுக்கு அந்நாட்டு இலங்கை தூதரகத்துக்கு செல்ல முடியாதுள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.

அவ்வாறு தூதரகத்தை நாடும் பெண்கள் தொழில் வழங்குநர்களால் பல ஆண்டுகள் குறித்த பெண்கள் பணம்கொடுத்து வாங்கப்பட்டுள்ளமையினால் தூதரகத்தினாலும் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பணியகத்தின் உதவி பெற்று நாடு திரும்ப முடியாத பெண்கள் முகவர்களினால் அந்நாட்டில் விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு பங்களாதேஷ் உட்பட பல நாட்டினருக்கு விற்கப்பட்டு பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது

ஓமான் இலங்கை துதரகத்திற்கு அண்மையாக அமைக்கப்பட்டுள்ள சுரக்‌ஷா பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 45 பெண்களில் இவ்வாறு ஆட்கடத்தலில் சிக்கிய பெண்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்படாமல் வேலைவாய்ப்பு ஆசைகளைக் காட்டி சுற்றுலா வீசாக்களை பயன்படுத்தி ஆட்கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகளை வழங்கப்படாவிடின் ஆட்கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆட்கடத்தலுக்கு எதிராக குறுகிய கால மற்றும் நீண்டகால திட்டங்கள் அமைக்கப்படவேண்டும் என்றும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image