''மரணம் வாழ்க்கையின் இயல்பான பகுதி" - புலம்பெயர் தொழிலாளரின் மரணத்துக்கு கட்டாரின் பதில்!

''மரணம் வாழ்க்கையின் இயல்பான பகுதி" - புலம்பெயர் தொழிலாளரின் மரணத்துக்கு கட்டாரின் பதில்!

புலம்பெயர் தொழிலாளர் ஒருவரின் மரணம் தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள கட்டார் கத்தார் உலகக் கோப்பையின் நிறைவேற்று அதிகாரி நாசர் அல்-காதர் "இறப்பு வாழ்க்கையின் இயல்பான பகுதி" என்று கூறினார்.

செய்தியாளர்களிடம் கருத்து வௌியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

குறித்த புலம்பெயர் தொழிலாளரின் மரணம் தொடர்பில் விரக்தியுடன் பதிலளித்த அவர் தொடர்ந்து கருத்து வௌியிட்ட போது, “மரணமானது வாழ்க்கையின் இயல்பான பகுதியாகும், அது பணியின் போதாயினும், உறக்கத்தினாலாயினும் அவர் இறந்தார். அவருடைய குடும்பத்துக்கு நாம் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறினார்.

கடந்த வாரம் சவுதி தேசிய அணி பயிற்சி பெறும் சீலைன் ரிசோட்டில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜை ஒருவார் போர்க் லிப்ட் ட்ரக் விபத்தில் உயிரிழந்தார். வாகனத்துடன் நடந்து சென்ற சந்தர்ப்பத்தில் ஒரு சரிவில் தவறி விழுந்து கொங்க்ரீட்டில் தலை மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே உலக காற்பந்து கோப்பை போட்டி கட்டுமானப்பணிகளில் தொழிலாளர்களுடைய உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் பலத்த விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் கட்டார் இம்மரணம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அவ்விசாரணையில் மரணத்துக்கு காரணம் குறித்த நிறுவனத்தின் கவனயீனம்தான் காரணம் என்று தெரிய வருமிடத்து

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நடத்துவது மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து கடுமையான விவாதம் நடைபெற்று வரும் போட்டியில் நடந்த சம்பவம் குறித்து கத்தார் பணி பாதுகாப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. இவ்வித்துக்கு காரணம் நிறவனத்தின் கவனயீனமென்பது உறுதிப்படுத்தப்பட்டால் அந்நிறுவனம் சட்ட நடவடிக்கை மற்றும் கடுமையான நிதி அபராதங்களுக்கு உட்படும் என்று பெயர் வெளியிட மறுத்த கட்டார் அரசாங்க அதிகாரி ஒருவர் ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸின் வெளியுறவு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில், தலைநகர் டோஹாவுக்கு தெற்கே உள்ள ஹோட்டலில் பணிபுரியும் போது தனது நாட்டவர் உயிரிழந்துள்ளார் என்றும் அந்நாட்டு தூதரகம் "அவரது மரணம் பற்றிய கூடுதல் விவரங்களைக் கண்டறிய சட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது" என்றும் குறிப்பிட்டிருந்தது.

கட்டார் உலகக் கிண்ண நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹசன் அல் தவாடி கருத்து வௌியிடுகையில், போட்டி அறிவிக்கப்பட்ட 2010ம் ஆண்டு தொடக்கம் கட்டுமானப் பணிகளின் போது இது 400 தொடக்கம 500 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்று குறிப்பிட்டார். எனினும் ஏனைய தரவுகளுக்கமைய உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை என்றும் இதுவரை 6500 கட்டார் பிரஜைகள் அல்லாதவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் அத்தொகையில் இயற்கையாக இறந்தவர்கள் விபத்தில் இறந்தவர்கள் என்று வகைப்படுத்தப்படவில்லை என்றும் த கார்டியன் செய்தி வௌியிட்டுள்ளது.

Middle East Eye

ஆயிரக்கணக்கான வௌிநாட்டவர்கள் உயிரிழந்துள்ள போதிலும் அவை குறித்த சரியாக விசாரிக்கப்படாமல் இயற்கை மரணம் என்று வெறுமனே கூறப்பட்டுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த வாரம் செய்தியாளர்களுக்கு கருத்து வௌியிட்ட உலகக் கோப்பை நிறைவேற்று அதிகாரி அல்-காதர், உலகக் கோப்பையின் போது தொழிலாளர்களின் மரணம் ஒரு பெரிய விஷயமாக இருந்தது. தொழிலாளர்களின் மரணங்கள் பற்றி கூறப்பட்ட அனைத்தும் மற்றும் பிரதிபலித்த அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்று தெரிவித்திருந்தார்.

"நேர்மையாக, நிறைய பத்திரிகையாளர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும் மற்றும் அவர்கள் ஏன் இந்த விஷயத்தைப் பற்றி இவ்வளவு காலமாக களமிறங்க முயற்சிக்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றும் அவர் வினவினார்.

மனித உரிமைகள் ஆய்வுக் குழுவான FairSquare Projects இன் இயக்குனர் நிக்கோலஸ் மெக்கிஹன் McGeehan, Middle East Eye யிடம் கருத்து தெரிவிக்கையில், கட்டார் நடவடிக்கைகள் எப்போதும் தங்கள் உலகக் கோப்பையைக் கட்டியெழுப்பிய தொழிலாளர்களின் உயிரைக் கடுமையாகப் புறக்கணிக்கும் வகையிலேயே இருந்தது. ஆனால் அவர்கள் பொதுவாக வேறுவிதமாக பரிந்துரைக்கும் வார்த்தைகளை பயன்படுத்தினர் ஆனால் நாசர் அல்-காதர் அந்த பாசாங்கையும் கைவிட்டு விட்டார் போல் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image