இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் உற்பத்தித்துறை வீழ்ச்சி

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் உற்பத்தித்துறை வீழ்ச்சி

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக பல உற்பத்தித்துறை மற்றும் சேவைத் துறை என்பன பல ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதுடன் பலரது ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாது போயுள்ளது. அத்துடன் புதிய நியமனங்கள் வழங்கப்படாமையும் இலங்கையின் உற்பத்தியை 8 வீதமாக குறைவடைந்துள்ளது என்று என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் ஆகிய இரண்டிலும் மத்திய வங்கி நடத்திய மாதாந்திர ஆய்வில், ஜூலை மாதம் வரை இரு துறைகளிலும் வேலை வாய்ப்புகள் வேகமாக குறைந்து வருவதைக் கண்டறிந்துள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் மோசமான கொள்கைகள் தேவையற்ற சுமையை நிறுவனங்கள் மீது சுமத்தியுள்ளமையினாலும் அதிமாக சுமத்தப்பட்டுள்ள வரி, வேகமாக அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் என்பன வணிகச் செயற்பாடுகளுக்கு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தற்காலிக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதால் உணவு உற்பத்தித் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என மத்திய வங்கியின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்றுமதி நோக்கில் ஆடை உற்பத்தியை மேற்கொள்ளும் உற்பத்தி நிறுவனங்கள் நிலைத்து நின்ற போதிலும் குறுகிய, சிறு, மத்திய தர உற்பத்தி நிறுவனங்கள் மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

அரச அனுசரணையில் நடைபெற்று வந்த பல கட்டுமானத் திட்டங்கள் இடை நிறுத்தப்பட்டமை, இறக்குமதி கட்டுப்பாடுகள் போன்றவற்றின் காரணமாக கட்டுமானத்துறை பாதிக்கப்பட்டமையினால் ஆயிரக்காணவர்கள் வேலையிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளமை, வணிகச் செயல்பாடுகள் மந்தமான நிலையில் உள்ளமையின் காரணமாக தற்போதுள்ள வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாமை போன்ற காரணங்களினால் ஜூலை மாதம் வரை சேவைத் துறையில் வேலைவாய்ப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகவும் ஆய்வில் அடையாளங்காணப்பட்டுள்ளது.

தொழிலில் இருந்து ஓய்வு பெறுகின்றமையும் பணியிலிருந்து இடைவிலகுகின்றமையும் இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

அனைத்து மட்டங்களிலும் பணியாற்றுகிறவர்கள் பணியை ராஜினாமா செய்கின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக பணியை விட்டு விலகுவது மிக வேகமாக நடைபெற்று வரும் வருகிறது. சிறந்த வேலைவாய்ப்பைக்களையும் சிறந்த வருமானத்தையும் எதிர்பார்த்தே மக்கள் பணியை விட்டு விலகுகின்றனர்.

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 208,000 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும், புதிய கடவுச்சீட்டு வழங்கல் 700,000 ஐத் தாண்டியுள்ளது என்றும் சமீபத்திய தரவுகள் காட்டுகின்றன.

மார்ச் மாதத்தில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வரை மக்கள் விவசாயத்திலிருந்து தொழில்துறைக்கு மாறினர்

நாட்டில் கொவிட் 19 தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் விவசாயத்துறைக்குள் மீண்டும் செல்வதில் ஆர்வம் காட்டிய மக்கள், அத்துறையில் அதிகமாக பணிபுரிந்தபோதிலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவை, நெருக்கடி காரணமாக சிதைந்த நம்பிக்கையை கண்டு வேறு துறைகளை நாடும் நிலைமை தோன்றியுள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டுக்கான தொழிலாளர் தரவுகளின்படி, கடந்த ஆண்டை விட இரண்டாம் காலாண்டில் தொழிலாளர் பங்குகளின் விரிவாக்கம் காரணமாக மக்கள் விவசாயத்துறையில் இருந்து கைத்தொழில், சேவைத்துறை வரை தொழிலை மாற்றியுள்ளனர்.

எவ்வாறாயினும், ரூபாயின் நெகிழ்ச்சிதன்மையிலான வீழ்ச்சி, டொலர் தட்டுப்பாடு, அதிகரிக்கும் வட்டி விகிதங்கள் மற்றும் இறக்குமதி மீதான இறுக்கமான கட்டுப்பாடுகள் ஆகியவை பல நாட்டில் பல வணிக நடவடிக்கைகளை குறைப்பதற்கு அல்லது நிறுத்துவதற்கு அல்லது நிலையங்களை மூடுவதற்கு ஏதுவாக அமைந்தது. இதனால் அடுத்தடுத்த மாதங்களில் இவ்வாறு வணிக சேவைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரையில் பத்தரமுல்லையில் செயற்பட்டு வந்த பிரான்ஸை தளமாக கொண்ட விளையாட்டுகடந்த வாரம், பிரான்ஸை தளமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ்-வேர் பிராண்டான Decathlon, மிகுதியாக இருந்த தனது ஒரேயொரு விற்பனை நிலையத்தையும் e-commerce விற்பனை நிலையத்தையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதியுடன் மூடப்போவதாக அறிவித்தள்ளது. இறக்குமதி மீதான தற்போதைய கட்டுபாடுகள் காரணமாக மூலப்பொருட்களை வழங்க முடியாதுள்ளமையே இதற்குக் காரணமாகும். இந்நிறுவனம் அதன் யுனியன் இடத்தில் இருந்த கடையை கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி மூடியது.

சில்லறை வணிகம் என்பது சேவைத் துறையின் ஒரு பகுதியாகும், இது மொத்தப் பொருளாதார உற்பத்தியில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தைக் கொண்டுள்ளது. அத்துடன் இலங்கையில் பாதிப்பேர் சில்லறை வணிகத்தினூடாக தொழில்வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

இந்தத் துறையின் மூலம் விவசாயத்திலிருந்து வேலைக்குச் செல்லும் நபர்களின் எண்ணிக்கை மூன்று மாதங்களுக்கு முன்பு 26.1 சதவீதத்திலிருந்து 2022 முதல் காலாண்டில் 25 சதவீதமாகவும், 2021 முழுவதும் 27.3 சதவீதமாகவும் குறைந்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், 2021 இன் இறுதிக் காலாண்டில் சேவைத்துறையில் பணியாற்றியவர்கள் எண்ணிக்கை 46.9 ல் வீதத்தில் இருந்து 47.1 வீதமாக அதிகரித்தது. 2021ம் ஆண்டு முழுவதையும் எடுத்துக்கொண்டால் சேவைத்துறையில் மொத்தமாக 46.7 விரிவடைந்திருந்தமை கவனிக்கத்தக்கது.

இவ்வாண்டு மார்ச் வரையிலான காலாண்டில் வேலையின்மை 4.3 ஆக பதிவாகியுள்ளது. 2021இல் 5.1 சதவீதத்திலிருந்து நெகிழ்வுத்தன்மையாக காணப்பட்டாலும் 2022ம் ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 8 வீதத்தினால் வீழ்ச்சியடையும் என்று கணிப்பிடப்பட்டுள்ளமையினால் வேலையின்மை இன்னும் அதிகமாக உயர்வடையும் என்று மத்திய வங்கி அச்சம் வௌியிட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image