தொழில் இழப்பால் பாதை மாறி செல்லும் ஆடை உற்பத்தித்துறை முன்னாள் ஊழியர்கள்!

தொழில் இழப்பால் பாதை மாறி செல்லும் ஆடை உற்பத்தித்துறை முன்னாள் ஊழியர்கள்!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் இலங்கையில், ஆடை உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண்கள் தொழில் இழப்பு காரணமாக பெரும்பாலான பெண்கள், இப்போது வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலாளிகளாக மாற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான நெருக்கடியை நாடு எதிர்நோக்கியுள்ளமையினால் சுமார் 22 மில்லியன் இலங்கையர்கள் வறுமையினால் பாரிய கஷ்டங்களையும் எதிர்கொண்டுள்ளனர். உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாமையினால் பலர் வீட்டை சமாளிக்க முடியாது தடுமாறுகின்றனர். இதனால் நாடு முழுவதும் தற்காலிக விபச்சார விடுதிகளை உருவாக்கியுள்ளது. கடந்த சில மாதங்களில் விபச்சாரத்தில் 30 சதவீதம் அதிகரித்துள்ளதால், இங்குள்ள பெண்கள் வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று பாலின உரிமைகளுக்காக பாடுபடும் ஸ்டேண்ட்-அப் மூவ்மென்ட் லங்கா (SUML) தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனங்களில் சில மசாஜ் மற்றும் மற்றும் ஆரோக்கிய மையங்களாக செயல்படுகின்றன. பலர் தங்கள் குடும்பங்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு வழங்குவதற்கு இதுவே ஒரே வழி என்று கூறுகிறார்கள். "ஆடை உற்பத்திச்சார் தொழிலில் பணிபுரியும் பெண்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் 'பாலியல் தொழிலை' நாடுகிறார்கள்" என்று  ஸ்டேண்ட்-அப் மூவ்மென்ட் லங்கா நிர்வாக இயக்குனர் அஷிலா தன்தெனிய தெரிவித்தார்.

புடவைத் உற்பத்தித் தொழில் பணியாற்றும் பல பெண்கள் கொவிட் 19 பரவலின் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில்தான் அவர் வருமானத்திற்காக பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டனர் என்றும் அமைப்பின் அஷிலா தன்தெனிய  சுட்டிக்காட்டினார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் இவர்கள் மத்தியில் சமூக நோய்கள் பரவியுள்ளமை வைத்தியசாலை மட்டங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றைக் கவனத்திற்கொண்டு பிரதேச குடும்பநல மருத்துவமாதுக்களுடன் உதவியுடன் புடவை உற்பத்தித்துறையில் பணியாற்றி தொழிலிழந்த நிலையில் அப்பிரதேசத்தில் வசிப்போருடைய வீடுகளுக்கு சென்று பல்வேறு தௌிவுபடுத்தல்களை மேற்கொண்டு வருகிறோம்.

"பெரும்பாலான பெண்கள் ஆரம்பத்தில் சட்டரீதியாக திருமணம் செய்யாமல் தமது ஆண் நண்பருடன் ஒன்றாக வசிக்கின்றனர். கொவிட் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி என்பவற்றின் காரணமாக ஒன்றாக வசித்த ஆண் அங்கிருந்து வௌியேறியுள்ள நிலையில் தனிமையாகும் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை அவதானிக்கக்கூடியாக உள்ளது.

தொழில் இழந்து பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தற்போது ஆய்வொன்று முன்னெடுக்கப்படுகிறது. அந்த ஆய்வின் முடிவுக்கமைய தெரிவு செய்யப்படும் பெண்களுக்கு நிதியுதவியை பெற்று வாழ்வாதார உதவிகளை வழங்க எண்ணியுள்ளோம். அது மாத்திரமன்றி தற்போது பாதுகாப்பற்ற முறையில் கர்ப்பம் தரித்துள்ள 4 பெண்களுக்கும் பல்வேறு உதவிகள், உளவியல் ஆலோசனைகள் என்பன வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image