பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளியிடுவோம்!

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளியிடுவோம்!

பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான பிரசார செயற்பாடு இன்று (25) ஆரம்பமாகிறது. 16 நாட்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இப்பிரசார செயற்பாட்டின் இந்த ஆண்டுக்கான தொனிப்பொருள் "பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர செயல்பாடுவோம்!" என்பதாகும்.

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான பிரசார செயல்பாட்டின் 16 நாட்கள் என்பது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒரு சர்வதேச பிரச்சாரமாகும்,.

இது பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகி சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ம் திகதியுடன் நிறைவடைகிறது.

1991 ஆம் ஆண்டு பெண்ணிய ஆர்வலர்களினால் இப் 16 நாட்கள் பிரசார செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும் இல்லாதொழிக்கவும் நோக்காக கொண்டு உலகளாவியரீதியில் உள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களை ஒழுங்கமைக்கும் ஒரு உத்தியாக இந்த பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாட்கள் பிரசார செயற்பாடு பயன்படுத்தப்படுகிறது.

கொவிட் 19 தொற்று காலப்பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருந்ததாக (UN Women 2021) சுட்டிக்காட்டப்பட்டது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறை (VAWG) என்பது பெண்களுக்கு எதிரான பாகுபாட்டின் மிக மோசமான வெளிப்பாடுகளில் ஒன்றாகும், மேலும் இது உலகளவில் மிகவும் பரவலான மற்றும் பரவலான மனித உரிமை மீறலாக உள்ளது, இது 3 பெண்களில் 1 பேரை பாதிக்கிறது, இது பெரிய அளவில் மாறாமல் உள்ளது. கடந்த தசாப்தம். சமீபத்திய மதிப்பீடுகளின்படி, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5க்கும் மேற்பட்ட பெண்கள் அல்லது சிறுமிகள் தங்கள் சொந்த குடும்பத்தில் யாரோ ஒருவரால் கொல்லப்படுகிறார்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன.

Stop

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாள் பிரச்சார செயற்பாட்டிற்கு இணைந்து செயற்படுமாறு பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியம் அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் பிரசார செயற்பாடு நிமித்தம் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் இலங்கை புதிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னரே பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் காரணமாக இலங்கைப் பெண்களும் சிறுமிகளும் முழுமையான சுதந்திரத்தையும் சந்தர்ப்பங்களையும் அனுபவிக்கவில்லை.

2019 ஆம் ஆண்டு மக்கள்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளியியல் திணைக்களத்தால் நடத்தப்பட்ட பெண்களின் நலன்புரி தொடர்பான கணக்கெடுப்பில் தமது வாழ்நாளில் 20 வீதமானவர்கள் நெருங்கிய துணையினால் உடல்ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறைகளுக்குள்ளாகினர் என்று கண்டறியப்பட்டுள்ளது. 25 வீதமான பெண்கள் 15 வயதுக்குப் பின்னர் துணை அல்லது துணையல்லாதவர்களினால் உடல் அல்லது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்துள்ளனர் என்றும் 18 சதவீதமானவர்கள் தங்கள் வாழ்நாளில் தமது துணையினால் பொருளாதாரரீதியான துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர் என்றும் அவ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாய்வில் கலந்துகொண்ட பெண்களில் 21 வீதமானவர்கள் குறித்த ஆய்வுக்கான நேர்காணலுக்கு முதல் தாம் பாதிக்கப்பட்டமை தொடர்பில் வௌியில் கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடியானது நிச்சயமாக இந்த ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய நபர்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. உயர் பணவீக்க விகிதங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பட்டினி, ஊட்டச்சத்து நெருக்கடி, வீடுகளில் ஏற்படும் செலவுப் போராட்டம், அதிகரித்து வரும் வறுமை நிலைகள், சமூக அமைதியின்மை, இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பிற சேவைகள் உள்ளிட்ட சுகாதார உதவிகளின் குறைப்பு ஆகியவை பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பாதகமான தாக்கங்களுக்கு பெண்கள் மற்றும் சிறுமிகளை அதிகளவு பாதிப்பிற்குள்ளாக்க நேரிடும்.

Sudharshini"தற்போதைய பொருளாதார நெருக்கடியானது ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளவர்களை மென்மேலும் பாதிப்புக்குள்ளாக்கும். தற்போது ஏற்பட்டுள்ள உயர் பணவீக்க விகிதங்கள் மற்றும் அதனால் ஏற்படும் உணவின்மை, ஊட்டச்சத்து குறைப்பாடு, வீடுகளில் ஏற்பட்டுள்ள வறுமை நிலை, சமூக அமைதியின்மை, இனப்பெருக்கம் தொடர்பான சுகாதார வசதிகள், பிற சேவைகள் உள்ளிட்ட சுகாதார உதவிகளில் குறைப்பு ஆகியவை பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பாதகமான தாக்கங்களை அதிகமாக்கும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

"ஒற்றுமை இல்லாமல் பாலின அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்து போராட முடியாது. இதனால் அரசாங்கங்கள், வளர்ச்சி பங்காளிகள், சமூக நிலை அமைப்புக்கள், இளைஞர்கள், ஊடகங்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக செயற்பட முன்வரவேண்டும். பாலின அடிப்படையிலான 16 நாட்கள் உலக பிரசார செயற்பாடானது, இலங்கையில் பெண்களுக்கு சமமான தளத்தை உருவாக்குவது தொடர்பில் வாதிடுவதற்கான காலமாக பார்க்கப்படுகிறது பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தவிசாளர் டொக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார்.

இந்த உலகளாவிய பிரசார நடவடிக்கையுடன் ஒன்றிணைந்து நிற்பதற்கு, இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் நவம்பர் 25 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பரிந்துரை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அவர்கள் பாலின அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்துப் போராடுவது தொடர்பில் நவம்பர் 28 மற்றும் 29 ஆம் திகதிளில் இரண்டு குழுக் கலந்துரையாடல்களை நடாத்துகின்றனர். மற்றும் டிசம்பர் முதலாம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடாத்துகின்றனர்.

“பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” என்ற செய்தியுடன் கூடிய கைப்பட்டி ஒன்று ஒற்றுமை நடவடிக்கையாக பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகள் மீது கட்டப்படும். பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் செம்மஞ்சள் நிற உடையில் வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இது சமீபத்தில் நிறுவப்பட்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கமளித்தல் பாலின சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கம் தொடர்பான வெளியீடுகளைக் கொண்ட பாராளுமன்ற நூலகத்தின் பாலின மற்றும் சமூக உள்ளடக்கப் பிரிவில் இடம்பெறும். பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பாராளுமன்றத் தகவல் முறைமைகள் திணைக்களம் மற்றும் பாராளுமன்ற செயலகத்துடன் கைகோர்த்து மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image