கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக பிரச்சினை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் உப குழுவின் அறிக்கை இன்று (01) துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
நாட்டுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று துறைமுக அமைச்சின் செயலாளர் யு. டி. சி ஜயலால் தெரிவித்தார் என 'அருண' இணையதளம் செய்தி வௌியிட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையில் உள்ள விடயங்கள் விரைவில் அமைச்சர் அறிவிப்பார் என்றும் அமைச்சரவைக்கு கருத்து தெரிவிப்பார் என்றும் துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க கடந்த 30ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வௌியிட்டிருந்தார்.
கிழக்கு முனையத்தின் அனைத்து செயற்பாடுகளையும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் முன்னெடுக்கு முடியும் என்றும் அதிகாரசபையின் தலைவர் சுட்டிகாட்டியுள்ளார்