இரண்டு மூன்று கிழமைகளில் கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக பொது வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் இந்நிலை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்று நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நினைத்துக்கொண்டு மக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்படுகின்றனர். இதனால் தொற்று வேகமாக பரவும் அபாயம் தோன்றியுள்ளது என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.
மேலும், எதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களில் போக்குவரத்துக்களை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறும் விடுமுறை கொண்டாட்டங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் உபுல் ரோஹன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.