கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்கங்களின் தேசிய செயற்றிட்டத்தினால் வழங்கப்பட்ட முன்மொழிவு குறித்து இன்று (25) கலந்துரையாடப்படவுள்ளது என்று துறைமுக அமைச்சின் செயலாளர் யு.டி.சீ ஜயலால் தெரிவித்துள்ளார்.
துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு இன்று கூடவுள்ளது. இக்கூட்டத்தில் குறித்த முனையம் தொடர்பில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் செய்யபட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உள்ள விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
அத்துடன் குறித்த முனையத்திற்கான முன்மொழிவு மற்றும் விடயங்கள் குறித்த ஆராய இவ்வாரம் முழுவதும் கூடிய ஆராயவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.