அரச சேவையில் இணைந்துள்ள 160,000 பேருக்கு ஓய்வூதிய உரிமை மறுப்பு

அரச சேவையில் இணைந்துள்ள 160,000 பேருக்கு ஓய்வூதிய உரிமை மறுப்பு

நல்லாட்சி காலப்பகுதியில் அரச சேவையில் இணைத்து்கொள்ளப்பட்டவர்களுக்கு ஓய்வூதிய உரிமை மறுக்கப்பட்டமையினால் 2016 ஆண்டு தொடக்கம் இன்று வரை சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 160,000 பேருக்கும் அதிகமானவர்களுக்கு பாரிய அநீதி இடம்பெற்றுள்ளது என்று ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு சேவையில் இணைக்கப்பட்ட ஓய்வூதிய உரிமையை இழந்தவர்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பணியில் இணைந்தவர்கள் அதிகமாக உள்ளனர் என்றும் அம்மத்திய நிலையம் சுட்டிககாட்டியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு முழுமையான ஓய்வூதியத்தை வழங்கும் முறையை நீக்கியது. தற்போதைய அரசாங்கம் அவ்வுரிமையை மீட்டுத் தருவதாக தேர்தல் மேடைகளில் முழங்கியபோதிலும் இதுவரை அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது சேவையில் இணைத்துக்கொள்ளப்படுபவர்களுக்கு வழங்கப்படும் நியமனக்கடிதங்களில் ஓய்வூதியம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கும் கட்டுப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அம்மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image