கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனமான அதானிக்கு வழங்குவதற்கு எதிராக துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில் காலி துறைமுக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று (29) ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளது.
பகலுணவின் போது துறைமுகத்திற்கு வௌியே, கொழும்பு - மாத்தறை பிரதான வீதியில் அமைந்துள்ள துறைமுக நுழைவாயிலை மறைத்து இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் காலி கிளையின் செயலாளர் சிசிர சமன் கீர்த்தி, சுதந்திர ஊழியர் சங்கத்தின் செயலாளர் மஹேஷ் கஹந்தகமகே, சுதந்திர ஊழியர் சங்கத்தின் அமைப்பாளர் கயான் மொஹொட்டி ஆகியோர் கருத்து வௌியிட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்காக துறைமுக ஊழியர்களுடன் இணைந்து போராடவுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அருண