தொழிலாளர் வேலை முடிவுறுத்தலுக்கான நட்டஈடு அதிகரிப்பு

தொழிலாளர் வேலை முடிவுறுத்தலுக்கான நட்டஈடு அதிகரிப்பு

தொழிலாளர் வேலை முடிவுறுத்தலுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவு 25 இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொழில் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தியினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த நட்டஈட்டுத் தொகை 1,250,000 ரூபாவாக காணப்பட்டது. அதனை மேலும் 1,250,000 இலட்சம் ரூபாவால் அதிகரித்து, 2,500,000 ரூபா வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2003 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான, 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க, தொழிலாளர் வேலை முடிவுறுததல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரிவு 6 (தொழில் ஆணையாளா படுஆரம்பே கன்கனம்கே பிரபாத் சந்திரகீர்த்தி ஆகிய நான் தொழில் என்னும் விடயம் குறித்தளிக்கப்பட்ட அமைச்சரின் கலந்தாலோசனையுடன், மேற்சொல்லப்பட்ட சட்டத்தின் பிரிவு 6 (ஈ) இன் கீழ் ஆக்கப்பட்டதும் இதற்கான அட்டவணையில் தரப்பட்ட தொழிலாளர் ஒருவருக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகான சூத்திரம் தொடர்பாக 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதிய 1384/7ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டதுமான கட்டளையை (2) ஆம் பகுதியில் 'ஒரு மில்லியன் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம்' (1,250,000) எனும் சொற்களுக்குப் பதிலாக 'இரண்டு மில்லியன் ஐந்து இலட்சம் ரூபா'(2,500,000) எனும் சொற்களை இரண்டாம் பந்தியில் இடுவதன் மூலம் இக்கட்டளையால் திருத்துகின்றேன்.

என்று வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Gazatte_abour.png

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image