சிகிச்சைக்கு இடமின்மையால் வீடுகளில் கொவிட் நோயாளர்கள்

சிகிச்சைக்கு இடமின்மையால் வீடுகளில் கொவிட் நோயாளர்கள்

விட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களை உடனடியாக வைத்தியசாலை அல்லது சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படாமல் கடந்த இரண்டு நாட்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை மத்திய நிலையங்களில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக இவ்வாறு வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் கடந்த 27ம் திகதி தொற்றுக்குள்ளான 200 பேர் வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்லப்படாமல் வீடுகளிலேயே தங்கவைக்கப்பட்டனர் என்று பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நோயாளர்களுக்கு கடந்த 18ம் திகதி தொற்று ஏற்பட்டுள்ளது. எனினும் வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக அவர்களை சிகிச்சைக்கு அனுமதிக்க முடியாதுள்ளது என்று அச்சங்கத்தின் செயலாளர் சுட்டிகாட்டியுள்ளார்.

கடந்த இரு நாட்களாக நோயாளர்கள் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமையானது மேலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஏதுவாக அமையும். நாளொன்றுக்கு 700 நோயாளர்கள் அடையாளங்காணப்படும் சந்தர்ப்பத்தில் இந்நிலை தோன்றியுள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளர்களை சிகிச்சை பெற சிகிச்சை நிலையங்களில் இட வசதி அவசியம் என்றும் அச்சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image