துறைமுக தொழிற்சங்க தலைவரொருவருக்கு திடீர் இடமாற்றம்

துறைமுக தொழிற்சங்க தலைவரொருவருக்கு திடீர் இடமாற்றம்

கொழும்பு துறைமுகத்தின் தொழிற்சங்க பிரதானியொருவருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு விற்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிர்ப்புகளை வௌியிட்டு வரும் துறைமுக தொழிற்சங்க தலைவர் ஒருவருக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அகில இலங்கை துறைமுக பொது சேவையாளர் சங்கத்தின் பிரதான செயலாளரான பி. நிரோஷன் கொரகானகேவிற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவ்விடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க நீச்சல் பிரிவில் இருந்து கட்டளைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தொழிற்சங்க தலைவரான நிரோஷன் கொரகானகே தனது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக சுதந்திரம் பெற்ற ஒருவராவார். அவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக சுதந்திரம் பெற்ற ஒருவரை சங்கச் செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய வகையிலேயே மாற்றல் செய்யவேண்டும். சங்க செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இடமாற்றம் வழங்க சட்டத்தில் இடமில்லை. பொதுவான ஒரு ஊழியருக்கு மாற்றல் வழங்குவது போன்று தொழிற்சங்க செயற்பாட்டாளர்களுக்கு வழங்கவும் முடியாது.

எவ்வாறு இருப்பினும் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி குழுமத்திற்கு விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிராக துறைமுக ஊழியர் சங்கங்கள் மிக ஒற்றுமையாக இணைந்து போராடி வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையிலேயே அரசாங்கம் இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அதற்கு எவ்விதத்திலும் அனுமதிக்கப்போவதில்லையென்றும் துறைமுக ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Unionlanka

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image