வருடாந்த இடமாற்றத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக சுகயீன அடையாள போராட்டமொன்றை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளை தீர்மானித்துள்ளது.
All Stories
பயிற்சி பூர்த்தியாகி 5 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் நிரந்தர சேவையில் இணைக்குமாறு பொதுசேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிசபை அமைச்சருக்கு பட்டதாரி பயிலுநர்களாக இணைக்கப்பட்ட பட்டதாரிகள் சார்பாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
நாளை (28) காலி மாவட்ட வைத்தியர்கள் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் காலி மாவட்ட கிளை செயலாளர் டொக்டர் மஞ்சுள டி சொய்சா தெரிவித்துள்ளார்.
காலி மாவட்ட பிரதி ஆளுநர் பவுஸ் நியாஸ் மாவட்டச் செயலக சுகாதார வைத்திய அதிகாரி பர்டம் டி சில்வாவிற்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை மாவட்டத்தில் அனைத்து வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்திருந்த நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமானது மாநகரசபையிலிருந்து வேறிடத்திற்கு மாற்றுவதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்தமை மற்றும் நாளை (28) மாநகரசபையில் விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்து இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பது என மாநகர ஆளுநர் பிரியந்த சஹபந்து உறுதியளித்ததையடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக டொக்டர் மஞ்சுள டி சொய்சா தெரிவித்தார்.
அதற்கமைய காலி மாநகர சபை சுகாதார அதிகாரிகள் காரியாலயம் இன்று (27) தொடக்கம் காலி தங்கெதர ரோயல் சிடி என்ற இடத்தில் இயங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் காலி கிளை செயலாளர் மஞ்சுள டி சொய்சா தொடர்ந்தும் கொவிட் 19 ஒழிப்பு நடவடிக்கை உட்பட அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
உலகில் கொவிட் 19 வைரஸ் பரவும் மத்திய நிலையமாக அமெரிக்கா உள்ளது. இலங்கையில் கொழும்பு அவ்விடத்தை பெற்றுள்ளது என்று பொது வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இந்நிவாரணம் வழங்கும் நிகழ்வானது டிசம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரையில் இடம்பெற்றது.
தற்போது நாட்டில் நிலவும் தொற்றுச்சூழலில் ஒன்லைன் ஊடாக மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு தேவையான வசதிகளை ஆசிரியர்களுக்கு அரசாங்கம் வழங்கவேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்க தவறும் பட்சத்தில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளன.
கொழும்பு கல்வி அமைச்சுக்கு முன்பாக கல்வியற் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர் நியமனத்தை பெற்றுக் கொள்வதில் உள்ள பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் (17) போராட்டத்தை முன்னெடுத்தது.
நேற்று காலை 10 மணி அளவில் தாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதித் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில்..
1. கல்வியற் கல்லூரி பயிற்சியை முடித்தவர்களுக்கு உரிய முறையில் ஆசிரியர் நியமனத்தை வழங்கு!
2. online முறையில் பாடசாலையை தெரிவு செய்யும்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடு!
3. அரசின் இயலாமையால் கல்வியற் கல்லூரி நியமனம் 3500 இழுபறி நிலையில்.
4. பாடசாலைகள் எதிர்நோக்கும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை தீர்த்து வை.
4. கல்வியற் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் அரசியல் தலையீட்டை உடன் நிறுத்து!
6. அமைச்சரே கல்வி அமைச்சுக்கு ஆசிரியர் நியமனத்தை வழங்க முடியாதா?
7. அமைச்சரே பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தேடி அறிய முடியாதா? போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜெயசிங்க அவர்களின் தலைமையில் கல்வியற் கல்லூரி மாணவர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் கல்வி அமைச்சுக்கும் இலங்கை ஆசிரியர் சேவை சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையில் முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கல்வி அமைச்சு முக்கிய கோரிக்கைகளுக்கு இணக்கத்தை தெரிவித்தது. உடன்பாடு மேற்கொண்ட விடயங்களாக
01பிரச்சினைகளுக்கு உள்ளான online விண்ணப்பதாரிகளை மீண்டும் submit செய்வதற்கு வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தல்.
02 ஆட்சேர்ப்பு அடிப்படையில் மற்றும் நிரந்தர வசிப்பிடத்திற்கு அமைவாக ஆராய்ந்து பார்த்து தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு அமைவாக உரிய பிரதேச செயலகப் பிரிவு அல்லது மாவட்டத்துக்கு உள்ளே,அப்படியும் இல்லையாயின் உரிய மாகாணத்துக்குள் மட்டும் நியமனத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும்,
03 உங்களது திறமையின் அடிப்படையில் பெற்றுக் கொண்டுள்ள Rank ஐ அடிப்படையாகக் கொண்டு தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்வதற்கும்,
04 தேசிய அடையாள அட்டை இலக்கத்துக்கு அமைவாக online முறைமூலம் அனுப்பமுடியாத டிப்ளோமாதாரிகளுக்கு விண்ணப்பப் படிவப் புகைப்படத்தை Email ஊடாக அனுப்பிய பின் உரிய பிரச்சினைகளைத் தீர்த்துத் தருவதற்கும்,
05 இறுதியாக நியமனத்தைப் பெற்றுக் கொடுக்கும் போது மேலும் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் மேன்முறையீடு செய்வதற்கு வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் உடன்பாடு காணப்பட்டது.
இந்த உடன்பாடுகளின் அடிப்படையில் கல்வி அமைச்சு உங்கள் நியமனத்தைப் பெற்றுத் தரும்வரை இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மிகுந்த அவதானத்துடன் உள்ளது. உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படின் 0777685038/0701057814 என்ற whatsapp இலக்கங்களூடாக CTSU NCOE 2016-2018 whatsapp குழுவிற்கு அனுப்பி வைக்குமாறும் மேலதிக தகவல்களுக்கு 0713280729 /0773080729 இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்துமாறு சங்கத்தின் உப தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை, துன்புறுத்தல்களை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் C190 பிரகடனம் நிமித்தம் ப்ரொடெக் தொழிற்சங்கத்தின் அட்டன் கிளையில் நிகழ்வொன்று அண்மையில் நடைபெற்றது.
பண்டிகைக் காலத்தில் பலர் மேல் மாகாணத்தில் இருந்து பிற மாகாணங்களுக்கு சென்றவர்களில் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிபடுத்தப்பட்டமையினால் பல உப கொத்தணிகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் கட்டம் கட்டமாக போராட்டத்தை நடத்த அகில இலங்கை சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளம் தீர்மானித்துள்ளது.
'சுவசெரிவ் ஊழியர்கள் சிலர் பணி நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உழைக்கும் மக்கள் சக்தி தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று (08) போராட்டம் ஒன்றை மேற்கொண்டது.