தென் கொரியாவில் பணியாற்ற இலங்கையர்களை அனுப்புவதற்காக 1,125 வீசாக்கள் தயார் நிலையில் உள்ளதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
All Stories
இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதம் வரை 2,885 பேர் தென் கொரியாவுக்கு தொழில் நிமித்தம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பிளாட்டினம் விழாவை முன்னிட்டு வழங்கப்பட்ட சேவைப் பதக்கம் நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை வைத்தியர் அசோக டயஸுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மீதான பயணக்கட்டுப்பாடுகளை கனடா தளர்த்தியுள்ளது.
உண்டியல் முறையில் பணம் அனுப்புகிறவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் மற்றும் வௌிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிறந்த 25 குடியேறியோருக்கான கனேடிய விருது 2022இனை இரு இலங்கை வம்சாவளி கனேடியர்களான பேராசிரியர் ஜானக ருவன்புர மற்றும் கலாநிதி சிவகுமார் குலசிங்கம் ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர் என்று கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
சட்ட ரீதியான வங்கிகளின் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்பி வைப்பதன் மூலம் விமான நிலையத்தில் 6650 டொலர்கள் வரை சுங்கத் தீர்வை பெறுமதியை உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வௌிநாடுகளில் இருந்து சட்டரீதியாக வங்கிகளுக்கு பணம் அனுப்பி நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுத் தரும் புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சாரத்தினால் இயங்கும் வாகனத்தை கொள்வனவு செய்வதற்கான அனுமதியை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் இன்று (31) வௌியிடப்பட்டுள்ளது.
இரண்டு வயதுக்கும் குறைந்த பிள்ளைகள் உள்ள தாய்மார் வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வௌியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் இந்தியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பும் செயன்முறையை இலகுபடுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்,
LankaRemit பணம் அனுப்பும் செயலியை ஊக்குவிப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் கைகோர்த்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு தேவையான பொலிஸ் அனுமதி அறிக்கைகளை விரைவாகப் பெறுவதற்காக இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 10 கணினிகளை அன்பளிப்பாக வழங்கியது.