உண்டியல் முறையில் பணம் அனுப்புகிறவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

உண்டியல் முறையில் பணம் அனுப்புகிறவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

உண்டியல் முறையில் பணம் அனுப்புகிறவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் மற்றும் வௌிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இடைக்கால வரவு செலவு மீதான விவாரம் இன்று (02) பாராளுமன்றில் நடைபெற்றபோது கருத்து வௌியிட்டபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அந்நிய செலாவணி சரியான முறையில் கிடைக்குமானால் நாட்டுக்கு 700 - 800 மில்லியன் வரை கிடைக்கும். அதற்குப் பயந்தே அனுப்பவேண்டாம் என்கின்றனர். பிச்சைக்காரர்களுக்கு தொடர்ந்தும் புண்ணை ஆறவிட பயப்படுவார்கள்.

உண்டியல் முறையில் பணம் அனுப்புகிறவர்களை கைது செய்யும் வகையில் இன்று நாம் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். உண்டியல் முறையில் பணம் கொண்டு வந்து அதனை வங்கிக்கணக்குக்கு வைப்பு செய்வார்களாயின் அவ்வங்கிகளை குறித்து ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுப்போம்.

மரியாதைக்குரிய முறையில் சம்பாதிக்கும் பணத்தை மரியாதையான முறையில் இலங்கைக்கு அனுப்புமாறு நாம் வேண்டுகோள்விடுக்கிறோம்.

அவ்வாறு சட்டரீதியான முறையில் பணம் அனுப்புகிறவர்களுக்கு மின்சாரத்தினால் இயங்கக்கூடிய வாகனத்தை கொள்வனவு செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்க, குறைந்த வட்டிக்கு வீட்டுக்கடன் வழங்க, ஓய்வூதியத் திட்டமொன்றை ஆரம்பிக்க என பல்வேறு சலுகைத் திட்டங்களை ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image