பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பிளாட்டினம் விழாவை முன்னிட்டு வழங்கப்பட்ட சேவைப் பதக்கம் நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை வைத்தியர் அசோக டயஸுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைக்கும் இலங்கை சமூகத்திற்கும் ஆற்றிய சிறந்த சேவையை பாராட்டி இச்சேவை பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் வசிக்கும் கலாநிதி அசோகா டயஸுக்கு நியூசிலாந்து ஆளுநரான திருமதி சிண்டி கெய்ரோவினால் இவ்விருது வழங்கப்பட்டது.
நியூசிலாந்தில் வாழும் இலங்கை மக்களுக்கும் நியுசிலாந்து குடிமக்களுக்கும் ஆற்றிய பணி இங்கு மதிப்பிடப்பட்டது.
மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கலாநிதி அசோக டயஸ் பெரும் பங்காற்றியுள்ளார்.
கொவிட் 19 தொற்றுநோய்களின் போது இலங்கைக்கு அதிக ஒக்ஸிஜன் ஜெனரேட்டர்களை வழங்குவதற்கும் அவர் முன்முயற்சி எடுத்தார்.
இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு டொக்டர் அசோக டயஸ் தலைமை தாங்குகிறார்.