தென் கொரியா வேலைவாய்ப்பிற்காக 1,125 வீசாக்கள் தயார்

தென் கொரியா வேலைவாய்ப்பிற்காக 1,125 வீசாக்கள் தயார்

தென் கொரியாவில் பணியாற்ற இலங்கையர்களை அனுப்புவதற்காக 1,125 வீசாக்கள் தயார் நிலையில் உள்ளதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வாரத்துக்கு 250 பேர் என்ற வகையில் இலங்கையர்கள் தென் கொரியாவுக்கு பணிக்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தென் கொரியா தொழில்வாய்ப்பினை எதிர்பார்த்துள்ள இளைஞர்களிடம் கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரிய மனிதவள திணைக்களம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளும் இந்த கலந்துகொண்டனர்.

கொரிய வேலை தேடுபவர்களுக்கான வீசா விண்ணப்பத்தில் ஏற்படும் தாமதங்களைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இலக்குகள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கொரியப் பரீட்சைகளை நடாத்துவதற்கு அதிக வசதிகளுடன் கூடிய புதிய நிலையம் ஒன்று வழங்கப்படும் எனவும், எதிர்வரும் வருடத்தில் கொரிய தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க கொரிய மனிதவளத் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image