இலங்கை மீதான பயணக்கட்டுப்பாடுகளை கனடா தளர்த்தியுள்ளது.
அதற்கமைய, இந்த வாரம் இலங்கையை மஞ்சள் நிற பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டதையடுத்து இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அநாவசியமான பயணங்களை தவிர்த்தல், அதிக எச்சரிக்கையுடன் இருத்தல் என்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது என்று கனடா அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு இன்னும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் இலங்கை பச்சை பட்டியலில் இடம்பெறாமல் மஞ்சள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஓகஸ்ட் பிற்பகுதியில், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் நோர்வே உட்பட பல ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை தளர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.