கொரோனா தொற்று பரவல் காரணமாக வீட்டில் இருந்து கடமைகளை முன்னெடுக்க வழங்கப்பட்டிருந்த ஏற்பாடு முடிவடைவதாகவும் நாளை (08) திகதி தொடக்கம் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அவரவர் பணியிடங்களுக்கு வருகைத் தரவேண்டும் என்றும் பொது நிருவாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்து அரச உத்தியோகத்தர்களும் நாளை தொடக்கம் பணியிடங்களுக்கு வருகைத் தரவேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பான வேலைச்சூழலை உருவாக்க வேண்டியது அந்தந்த நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளின் பொறுப்பு என்று அமைச்சின் செயலாளர் ஜெ. ஜெ. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
பணியிடங்களுக்கு வருகைத் தராமல் இருப்பது விடுமுறையாக கருதப்படும் என்று குறிப்பிட்ட சுற்றுநிருபத்தையும் அமைச்சு வௌியிட்டுள்ளது. அனைத்து அரச நிறுவனங்களிலும் கொவிட் 19 தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை செயற்படுத்தவேண்டியது நிறுவன உயரதிகாரிகளின் பொறுப்பு. எவ்வித தடங்கல்களுமின்றி பொது சேவைகள் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்.. அரச நிறுவனங்களில் சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்று அச்சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.