கொவிட்-19 தடுப்பூசி பெற்றுக்கொள்வது தொடர்பான சுகாதாரத்துறையின் அறிவித்தல்

கொவிட்-19 தடுப்பூசி பெற்றுக்கொள்வது தொடர்பான சுகாதாரத்துறையின் அறிவித்தல்
கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் அவசியமற்ற முறையில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.
 
தடுப்பூசி வழங்கல் குறித்து விளக்கமளித்துள்ளபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
 
மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில், அதிக கொவிட் அச்சுறுத்தல் உள்ள கிராம சேவகர் பிரிவுகளில் தடுப்பு செலுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான இடங்களில் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் நல்லமுறையில் இடம்பெறுகின்றன. எனினும் சில இடங்களில் ஏதோ ஒரு காரணத்திற்காக நீண்ட வரிசையையும், பொதுமக்கள் கூடுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த நிலைமையை நாங்கள் அனைவரும் நன்றாக புரிந்துகொண்டு இந்த இடங்களில் அவசியமற்ற முறையில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.
 
சுகாதாரத் வைத்திய அதிகாரிகளினால் நீங்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்காக கூறப்படும் நாள் வரையில் காத்திருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவும். தடுப்பூசி கிடைக்கப் பெறவேண்டிய அனைவருக்கும் தொடர்ந்து வழங்கப்படும். அது நிறுத்தப்பட மாட்டாது. ஏதாவது ஒரு இடத்தில் ஒரு நாளில் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியாமல் போனால், பிறிதொரு நாளில் அதனை பெற்றுக்கொள்ள முடியும்.
 
எனவே, தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் அவசியமற்ற முறையில் ஒன்று கூடுவதற்கு செல்ல வேண்டாம். தடுப்பூசியை மிகவும் இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே பொறுமையுடன் செயல்பட்டு அனைவரும் இந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் விசேட வைத்தியர் ஹேரத் தெரிவித்துள்ளார்.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image