நியமனங்கள் கிடைக்கப்பெறாத பட்டதாரிகளுக்கு ஒரு நற்செய்தி!

நியமனங்கள் கிடைக்கப்பெறாத பட்டதாரிகளுக்கு ஒரு நற்செய்தி!

பயிற்சிக்கு தகுதி பெற்ற மற்றும் இன்னும் நியமனக் கடிதங்கள் கிடைக்கப்பெறாத பட்டதாரிகளுக்கு, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நியமனக் கடிதங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக  அரசசேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உறுதியளித்துள்ளதென ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வயது எல்லை காரணமாக அநீதிக்குள்ளான வேலையற்ற பட்டதாரிகள் நேற்று (03) கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்னால் போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

நியமனங்கள் வழங்கப்படுவதற்கான நியாயமான காரணங்கள் இருக்கின்ற போதிலும், இதுவரையில் நியமனங்கள் வழங்கப்படாத பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் எப்போது வழங்கப்படும் என்பதை கேட்டறிவதற்காக நாங்கள் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இன்று (03) வந்தோம்.

எதிர்வரும் சில தினங்களுக்குள் அவர்களுக்கு நியாயத்தை நிறைவேற்ற முடியும் என அமைச்சின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சின் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

அவ்வாறாயின், அவர்களுக்கு 45 நாட்கள் பிந்தியே நியமனக் கடிதங்கள் கிடைக்கும் என நாங்கள் கூறினோம். ஏனெனில் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி தான் இந்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க இருந்தது. அப்படியாயின், என்ன செய்வது என்று கேட்டோம். எனவே, அவர்களுக்கு பெப்ரவரி மாதம் முதலாம் திகதிக்கு திகதியிட்டு நியமனக் கடிதங்களை வழங்குமாறு நாங்கள் யோசனை ஒன்றை முன்வைத்தோம். அதனை அவ்வாறு செய்வதாக அமைச்சின் தரப்பில் உறுதியளித்தனர். அதனை அவ்வாறு செய்யாவிட்டால் அதற்கு அடுத்து என்ன செய்வது என்பது பற்றி நாங்கள் கலந்துரையாடுவோம்.

எனவே, தற்போது நியமனம் கிடைக்கவேண்டி இருந்தும் அநீதி இழைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சின் தரப்பில் நியாயமான தலையீடு இல்லாவிட்டால், நியமனக் கடிதங்கள் கிடைக்காவிட்டால், விருப்பமின்றியேனும் அதற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்படும். அதுவரையில் எங்களுடன் இந்த போராட்டத்தில் கைகோர்த்து செயல்படுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image