தீர்வு வழங்காவிட்டால் உணவு தவிர்ப்பு போராட்டம் - வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள்

தீர்வு வழங்காவிட்டால் உணவு தவிர்ப்பு போராட்டம் - வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள்

எதிர்வரும் 8 ஆம் திகதிக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் இன்றுடன் தொடர்ந்து ஆறாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர்களாக கடமையாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக சுகாதார பணியாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

எனினும், குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, குறித்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், நிரந்தரநியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர் தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறும் நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் வைத்தியசாலைகளில் கடமையாற்றியதாகவும், எனவே தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

001.jpg

002.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image