தோட்ட அதிகாரிகளுக்கு எதிரான வன்முறையை நிறுத்துக - முகாமைத்துவத்தினர் வலியுறுத்தல்

தோட்ட அதிகாரிகளுக்கு எதிரான வன்முறையை நிறுத்துக - முகாமைத்துவத்தினர் வலியுறுத்தல்

பெருந்தோட்டப்பகுதிகளில் பணியாற்றும் துரைமார் உட்பட தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், ஹோல்டன் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டும் அட்டன், மல்லியப்பு சந்தியில் இன்று (03) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பெருந்தோட்டப்பகுதிகளில் பணியாற்றும் முகாமையாளர்கள் உட்பட தோட்ட அதிகாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

'தொழிலாளர் அராஜகம் ஒழிக, தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக, தோட்டங்களில் அரசியல் மயமாக்கலை நிறுத்து, முகாமைத்துவத்துக்கு எதிரான வன்முறையைக் கண்டிக்கின்றோம்' என்றவாறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்த பதாதைகளை கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஏந்தியிருந்தனர். கைகளில் கறுப்பு பட்டிகளையும் அணித்திருந்தனர்.

பெருந்தோட்டப் பகுதிகளில் தோட்ட அதிகாரிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. அண்மையில் ஹோல்டன்  தோட்டத்தில் துரையின் வீடு தேடி சென்று சிலர் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே, தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவது, உறுதிப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு தோட்ட அதிகாரிகளும் பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர். எனவே, எமக்கு எதிரான வன்முறை சம்பவங்களைக் கண்டிக்கின்றோம். நீதி கிடைக்க வேண்டும். இப்பிரச்சினையை சர்வதேசம் வரை கொண்டு செல்வோம்.' - என்று துரைமார் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

செய்தியாளர் - க.கிஷாந்தன்

DSC08780.jpg

DSC08768.jpg

DSC08782.jpg

 

DSC08783.jpg

DSC08804.jpg

DSC08818.jpg

DSC08829.jpg

DSC08833.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image