சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றினால் சுகாதார ஊழியர்கள் மற்றும் மக்களிடம் பணம் வசூலிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
All Stories
அரச மற்றும் தனியார் துறையின் சேவையாளர்கள் வாக்களிப்பதற்கு போதுமான காலவகாசம் வழங்க வேண்டும்.
அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
கடவுச்சீட்டு வரிசைக்கு தீர்வாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள Online இல் திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்யும் முறைமையை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில் நிலைய அதிபர்களின் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது.
பொது நிர்வாக சேவை உள்ளிட்ட பல அரச நிர்வாக சேவைகளில் 1200-இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் நிலவுவதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு தேசிய தேர்தல்களின் போது, சம்பளம் மற்றும் சொந்த விடுமுறைகள் என்பவற்றை இழக்காமல் தத்தமது வாக்கினை அளிப்பதற்காக விடுமுறை வழங்குதல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்றும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 5000 ரூபாய் கொடுப்பனவையும் எதிர்வரும் ஜனவரி முதல் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்வதற்கு ஒருநாள் அல்லது சாதாரண சேவையின் கீழ் நாளொன்றை ஒதுக்கிக்கொள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இணையவழியுடாக சேவையை வழங்குகிறது.
வெளிநாட்டு தூதுவர்கள் சேவைக்காக கடந்த அரசாங்கத்தினால் அரசியல் ரீதியில் நியமனம் வழங்கப்பட்டுள்ள 15 வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை மீள நாட்டுக்கு அழைப்பதற்கு வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தது.