
மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) அநுராதபுரத்தில் காலமானார்.
சீதா ரஞ்சனி ஊடகவியலாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் என்ற பன்முக ஆளுமை கொண்டவர். சுயாதீன ஊடக இயக்கத்தின் அழைப்பாளராக விளங்கியவர். ஊடகத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவராவார்.