அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல்

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல்

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று சனிக்கிழமை (08) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஆசிரியர் அதிபர் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் கல்வித்துறையில் முககொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கு உரிய தீர்வினைப்பெற்றுத்தருமாறும் தொழிற் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே இந்த சந்திப்பின் பின்னர் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில்,

இந்த நாட்டில் 2 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிபர்களும் கல்வித்துறையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.இது தொடர்பில் நாம் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம்.

May be an image of 8 people and temple

குறிப்பாக பதவி உயர்வு தொடர்பில் விடயங்களை முன்வைத்தோம். இது குறித்து அரச சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய புதிய சுற்றுநிருபம் வெளியிட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

கடந்த வருடம் முதல் பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை.ஆசிரியர்கள் சம்பளம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் எமக்கு வாக்குறுதியளித்தார்.

எனவே எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நாம் நம்புகிறோம். அதேபோன்று இதன்போது ஆசிரியர் அதிபர் ஆசிரிய ஆலோசகர்கள் கல்வித்துறையில் முகங்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வைப்பெற்றுத்தருவதாக பிரதமர் எமக்க உறுதியளித்தார் என்றார்

May be an image of 8 people and temple

இந் நிலையில் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மேலதிக கற்றல் செயற்பாடுகளுக்காக சுமார் 07கிலோமீற்றர் தூரத்திலுள்ள முத்துஐயன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ்கலவன் பாடசாலைக்கும், சுமார் 09கிலோமீற்றர் தூரத்திலுள்ள கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகாவித்தியாலயத்திற்கும், சுமார் 15கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரிக்குமே செல்லவேண்டிய அவலநிலைகாணப்படுவதால் குறித்த மன்னாகண்டல் பாடசாலையை தரம்-09 வரையாவது தரமுயர்ததித்தருமாறும் இதன்போது கிராம மகமகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது.  

இவ்வாறு தரமுயர்த்தினால் கனகரத்தினபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களும் மன்னாகண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்விகற்பதற்காக வருகைதருவார்கள் எனவும் கிராமமக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனைவிட மன்னாகண்டல் கிராமத்திற்கான வீதிச் சீரமைப்பு, பொதுப்போக்குவரத்தை ஏற்படுத்தல், மன்னாகண்டல் கமக்கார அமைப்பிற்குட்பட்ட மூன்றாம் கண்டம்பகுதியில் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 150ஏக்கர் காணிகளை விடுவிப்புச்செய்தல், எம்.பி கமம் விவசாய நிலங்களில் சுமார் 200ஏக்கரில்  மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்கு  உரமானியம் வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்தல், முன்பள்ளியை இயங்கச்செய்தல், வனவளத்திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுள்ள நீர்ப்பாசன வாய்க்கால்களை விடுவிப்புச்செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளும், குறைபாடுகளும் மக்களால் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் மன்னாகண்டல் கிராமத்தில் காணப்படும் குறைபாடுகளை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இதுதொடர்பான மகஜர்களையும் பெற்றுக்கொண்டார்.

அதேவேளை மக்களால் முன்வைக்கப்பட்ட குறித்த கோரிக்கைகள்தொடர்பால் தம்மால் கவனம்செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

May be an image of 4 people and text

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image