அரச சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கு வரவு - செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஆனந்த விஜேபால
அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போது தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச சேவையை முழுவதுமாக மாற்றியமைக்க ஜனாதிபதி அமைச்சரவையில் பத்திரமொன்றை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம்.அதற்காக சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் 17ஆம் திகதி வரவு - செலவுத் திட்ட ஆவணத்தில், 90 பில்லியன் ரூபாவை செலவழித்து அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும், குறிப்பாக அரசாங்க ஊழியர்களுக்கு 13 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.
மூலம் - வீரகேசரி