நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

வருடாந்த இடமாற்றப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தினால் மேல் மாகாணசபைக்கு உட்பட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் நிர்வாகக்குழு நேற்று கூடி இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது.
மேல் மாகாண ஆளுநரின் செயலாளரிடமிருந்து பெறப்பட்ட எழுத்துப்பூர்வ இணக்கப்பாட்டின் அடிப்படையில் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் செயலாளர் சானக தர்ம விக்ரம தெரிவித்துள்ளார்.
இதன்படி, மேல் மாகாண சபையின் கீழ் உள்ள அனைத்து வைத்தியசாலைகளின் சேவைகளும் இன்றைய தினம் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.