வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கைப் பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
All Stories
இலங்கை வெளிநாட்டு சேவை சங்கத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகப் பொறுப்பாளர்கள் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை வெளிநாட்டு அமைச்சிலுள்ள அமைச்சரின் பணியகத்தில் வைத்து சந்தித்தனர்.
கடந்த முதலாம் திகதி இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு இலங்கை வெளிநாட்டு சேவை சங்கத்தினால் பங்களிக்கக்கூடிய வழிகள் மற்றும் இலங்கை வெளிநாட்டு சேவை அதிகாரிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டன.
இலங்கை வெளிநாட்டு சேவை சங்கத்தின் அலுவலர்களை அமைச்சருக்கு அறிமுகப்படுத்திய சங்கத்தின் தலைவர் விஸ்வநாத் அப்போன்சு, நாட்டின் அபிவிருத்திக்காக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் ஆதரவைக் கோரும் முகமாக, அவர்களிடையே நல்லெண்ணத்தை உருவாக்கும் சூழலில் வெளிநாட்டு சேவை தீவிரமாக ஈடுபடக்கூடிய முக்கிய பகுதிகளை எடுத்துரைத்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, புதிய அலுவலகப் பொறுப்பாளர்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அதேவேளையில், நாட்டின் பிம்பத்தை வெளிநாடுகளில் காண்பிப்பதற்காக இலங்கை வெளிநாட்டு சேவையின் உறுப்பினர்கள் அளித்த மகத்தான பங்களிப்பை அமைச்சர் பாராட்டினார்.
இலங்கை வெளிநாட்டு சேவையின் உறுப்பினர்களுக்கு சுய அபிவிருத்திக்கான வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் அரசாங்க அபிவிருத்திக் கொள்கையுடன் இணைந்த இராஜதந்திர சேவையின் பங்களிப்பு எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப இலங்கை வெளிநாட்டு சேவையின் அதிகாரிகள் எதிர்கொள்ளும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான முழுமையான அணுகுமுறையைப் பெற்றுக் கொள்வதற்கான தனது உத்தரவாதத்தையும் இலங்கை வெளிநாட்டு சேவை சங்கத்திற்கு அமைச்சர் குணவர்தன வழங்கினார்.
சவுதி அரேபியாவில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டில் கடந்த, 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று முதல் மீள திறக்கப்படவுள்ளன.
வௌிநாடுகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
விமானநிலையம் திறக்கப்பட்டபோதிலும் வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தாய்நாடு திரும்ப சுகாதார அமைச்சின் அனுமதியை பெறுவது கட்டாயமாகும்.
வெளிநாடுகளில் இருந்து மேலும் 269 பேர் இன்று (20) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள ஆய்வகத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வது தற்போது குறைவடைந்துள்ளதாக மருத்துவ இரசாயண பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள ஆய்வகத்தில், சர்வதேசத்திற்கு ஏற்ற வகையிலான உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலமாக பி.சி.ஆர் பரிசோதனை கொள்ளளவை 4,500 வரையில் அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிஸ்டவசமாக, சுகாதார அமைச்சின் கொள்கைகளை தீர்மானிப்பவர்களினால், விமானப் பயணிகளுக்கு எந்த ஒரு பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ளாத ஆய்வகமாக இந்த ஆய்வகம் மாற்றப்பட்டுள்ளது.
விமானப் பயணிகளின் அனைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளையும், தனியார் ஆய்வகத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மிகவும் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணி ஒருவரிடமிருந்து ஒரு பி.சி.ஆர் பரிசோதனைக்காக 50 டொலருக்கும் அதிகமான பணம் அறவிடப்படுகின்றது.
இந்தப் பாரிய அளவான பணத்தை கணக்கிட்டால், நாட்டிள்ள பணியாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினரின் பிசிஆர் பரிசோதனைகளை இலவசமாக மேற்கொண்டு, இந்த ஆய்வகத்தை அரசாங்கத்திற்கு சுமையாகாத வகையில் கொண்டு நடத்தக்கூடிய பணத்தை இதனூடாக ஈட்டிக்கொள்ள முடியும்.
ஆனால் இங்கு இடம்பெறும் நடவடிக்கைகளின் மூலம் வெவ்வேறு தரப்பினரின் நண்பர்களே இறுதியில் பயனடைவதாக மருத்துவ இரசாயண பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் சுற்றுலா பயணிகளுடனான 11ஆவது விமானம் இலங்கை வந்தடைந்தது.
புலம்பெயர் தொழிலாளர்மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிநோக்கில் சென்று நாடு திரும்ப முடியாது பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருவோர் குறித்து அரச கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 ஒழிப்புக்கான செயலணியுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
பொருளாதார பிரச்சினையினால் நாடு திரும்ப முடியாமல் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர் என்று இதன்போது இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன சுட்டிக்காட்டினார்.
புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அனுமதியை வழங்கல் மற்றும் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்தல் தொடர்பில் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலின் போது வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, பிரதமர் செயலாளர் காமினி செனரத்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சுமார் 9 மாதங்கள் மூடப்பட்டிருந்த பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இன்று (21) திறக்கப்பட்ட நிலையில் முதலாவது விமானம் வந்தடைந்தது.
புத்தாண்டில் தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் பொறியில் துறையில் ஆழமான அனுபவமுள்ள வௌிநாட்டவர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் வரவேற்புள்ளது.