குவைத்தில் துன்புறும் இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை

குவைத்தில் துன்புறும் இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை

குவைத்துக்கான இலங்கை தூதரகத்தின் உதவியுடன் தற்காலிக பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய 100 இலங்கையர்கள் குவைத் ஜசீரா எயார்வேஸ் விமானத்தினூடாக நேற்று முன்தினம் (7) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

குவைத்தில் உள்ள தடுப்புக்காவல் நிலையங்களில் 148 பேரும் குடியேற்ற தடுப்பு மையங்களில் 160 பேரும் வேறு பல காரணங்களுக்காக 250 பேர் காவல் நிலையங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையர்களும் பல்வேறு காரணங்களுக்காக ஒரு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

இலங்கைக்கு திரும்புவதற்காக சுமார் 6,000 இலங்கையர்கள் தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர், அவர்களில் 3,221 பேர் ஏற்கனவே நாடு திரும்பியுள்ளனர்.

இதுவரை, சுமார் 80,000 இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல நாடுகளில் தாய் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image