All Stories

கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் சடலம் நாட்டுக்கு

குவைத்தில் பணியாற்றி வந்த நிலையில் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் சடலம் நேற்று (09) நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் சடலம் நாட்டுக்கு

இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு

ஜப்பானில் தொழில்நுட்பம்சார் தொழில்வாய்ப்புக்களுக்கு தகுதிவாய்ந்த இலங்கையர்களை இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பதிவு செய்யப்பட்ட வௌிநாட்டு முகவர் நிலையங்களுக்கு அனுமதி வழங்க இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தீர்மானித்துள்ளது.

குறித்த துறையில் துறைசார் தகுதியுடைய ஒருவரை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தகுதிவாய்ந்தவரிடமிருந்து 350,000 ரூபா வரை அறவிட முடியும் என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த தொகைக்கு மேலதிகமாக பணம் அறவிடுவிடுவது சட்டவிரோதமானது என்றும் அவ்வாறு அதிக பணம் அறவிடும் முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களுக்கான அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் என்றும் பணியகம் எச்சரித்துள்ளது.

ஜப்பானின் உள்ள தொழில்வாய்ப்புகளுக்கு தகுதியானவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி பெற்ற முகவர்களின் பெயர் விபரங்களை www.slbfe.lk என்ற இணையதளத்தில் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும்.

அதிக பணம் அறிவிட முயலும் முகவர் நிலையங்கள் தொடர்பான முறைப்பாடுகளை பணியகத்தின் விசாரணை பிரிவின் 0112-864118 அல்லது 0112-864241 என்ற தொலைபேசி இலக்கங்களூடாக முறைப்பாடு செய்ய முடியும் என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image