புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 10 தனிமைப்படுத்தல் நிலையங்கள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 10 தனிமைப்படுத்தல் நிலையங்கள்

நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்கு இலவச தனிமைப்படுத்தல் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான தனிமைப்படுத்தல் நிலையங்களை ஏற்பாடு செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

தொழில் அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கமைய,10 தனியார் ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை தேசிய கொரோனா தடுப்பு படையணியின் அனுமதியுடன் தெரிவு செய்துள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்ஹோட்டல்களூடாக ஒரே தடவையில் 571 பேருக்கு தனிமைப்படுத்தல் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க முடியும். ஹோட்டல் கட்டணம், உணவு, உட்பட வசதிகளை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்கும்.

இதற்காக பணியகம் நாளொன்றுக்கு ஒருவருக்கு 4500 ரூபா வீதம் வாராந்தம் 18 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளதாக தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image