,சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து நாடு கடத்தப்பட்ட 24 இலங்கையர்கள் இன்று (31) இலங்கை வந்தடைந்தனர்.
All Stories
நாடுதிரும்ப எதிர்பார்த்துள்ள, கட்டணம் செலுத்துவதற்கான இயலுமையற்ற அனைத்து பணியாளர்களையும் இலவசமாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கான புதிய பாதுகாப்பு நடைமுறைகளை சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ளது.
அதற்கமைய, அனுமதிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட ஒருவர் 14 நாட்களின் பின்னர் உரிய பயண அனுமதிகளை பெற்ற பின்னரே நாட்டுக்கு வர முடியும். அவ்வாறு வருபவர் நாட்டுக்கு வருகைத் தந்த முதலாவது நாள் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையத்தில் பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்நபர் தொடர்ந்து அத்தனியார் விடுதியில் 7 நாட்கள் தங்க வைக்கப்படுவார்.
அவ்வாறு அவர் தங்கியிருக்கும் 7 நாட்களுக்கு சுகாதார பாதுகாப்பு வழங்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல அனுமதியிருந்தபோதிலும் எங்கும் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. 7வது நாள் மீண்டும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்றில்லையென உறுதிப்படுத்தப்படுவாராயின் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கப்படுவார்.
இதேவேளை, தடுப்பூசி பெறாத நிலையில் நாடு திரும்புபவர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள். இவர்களுக்கு முதலாவது நாள், 11வது நாள் மற்றும் 14வது நாள் என்பவற்றில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனையில் தொற்றில்லையென உறுதிப்படுத்தப்பட்டால் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். இந்நிலையில் சுற்றுலாப்பயணியொருவர் 3 தினங்களுக்கு மாத்திரமே நாட்டில் தங்கியிருப்பாயின் வௌியில் செல்வதாயிருந்தால் மட்டுமே பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
போலி வீசாக்களை பயன்படுத்தி ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு செல்ல முற்பட்ட இருவரை குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் நேற்று (11) கைது செய்தனர்.
நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்கு இலவச தனிமைப்படுத்தல் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான தனிமைப்படுத்தல் நிலையங்களை ஏற்பாடு செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் செயற்றிறன் மிக்க திட்டத்தை செயற்படுத்த அரசு தவறினால் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து செயற்பட எமது கட்சி தயாராகவுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் ரோம் நகரில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வெலிவேரிய, நெதுன்கமுவ பிரதேசத்தை சேர்ந்த சுப்புன் ஹிருண பெரேரா என்ற 32 வயது நபரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கம்பஹா பிரதேசசபை உறுப்பினரும் ஆசிரியருமான சச்சினி செவ்வந்தி செனவிரத்னவின் கணவரான சுப்புன் ஒரு குழந்தையின் தந்தையாவார்.
சடலத்தை இலங்கை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பெந்தோட்டை எகோ சர்வ் ஹோட்டலில் நடத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டு வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதில்லை என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குவைத்துக்கான இலங்கை தூதரகத்தின் உதவியுடன் தற்காலிக பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்துடன தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நடவடிக்கை முன்னெடுக்க தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஜப்பான் குடிவரவு தடுப்பு முகாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயது இலங்கை பெண் உயிரழந்துள்ளார்.
''நாடுதிரும்பும் இலங்கையர்கள் தாம் வாழ்ந்த நாட்டில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்தால், அவர்கள் 14 நாள் கட்டாய தனிமைக்காக விடுதிகளுக்கோ, நிலையங்களுக்கோ அனுப்பப்படக்கூடாது. அவர்களது சொந்த வீடுகளில் சுயதனிமைக்கு அனுமதிக்கப்பட வேண்டும். அரசுக்கு என் ஆலோசனை''