ஜப்பான் குடிவரவு தடுப்பு நிலையத்தில தங்க வைக்கப்பட்ட இலங்கை பெண் திடீர் மரணம்
ஜப்பான் குடிவரவு தடுப்பு முகாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயது இலங்கை பெண் உயிரழந்துள்ளார்.
வீசா நிறைவுற்ற நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் தொடக்கம் நகோயா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று டோக்கியோவுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கை தூதரக அதிகாரிகள் குறித்த நிலையத்திற்கு விஜயம் செய்த நிலையில் குறித்த மரணம் தொடர்பான முழு விபரங்களையும் விசாரணை செய்து சமர்ப்பிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
2017ம் ஆண்டு மாணவியாக ஜப்பான் விஜயம் செய்த கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த அப்பெண்ணின் வீசா கடந்த ஓகஸ்ட் மாதம் நிறைவடைந்த நிலையில் வௌிநாட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நகோயா தடுப்பு முகாமில் குறித்த பெண் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனக்கு வழங்கப்பட்ட உணவு தொடர்பில் குறித்த பெண் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்து வந்த அப்பெண் அதனால் தான் பலவீனமடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் குடிவரவு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் இரு தடவைகள் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் பிரதேச பரிசோதனை வரும் வரையில் காத்திருப்பதாகவும் இவ்விடயம் இம்மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் முன்னெடுக்குமாறு ஏற்கனவே ஜப்பான் வௌிவிவகார அமைச்ச்ரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதையடுத்து அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்றும் தூதரக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தூதரக வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது.