புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்தை அமெரிக்க டொலர்களில் இருந்து இலங்கை ரூபாவாக பரிமாற்றம் செய்வதற்கு ஒரு டொலருக்கு 2 ரூபா வீதம் ஊக்குவிப்புத் தொகையை வழங்கும் திட்டத்தை வரவுசெலவு 2021 இல் முன்மொழியப்பட்டுள்ளது.
All Stories
2020 மார்ச் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கான நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கனடா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து ஒரு தொகுதி இலங்கையர் நேற்று (15) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் என்று தேசிய கொவிட் தடுப்பு மத்திய நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களிடம் அறவிடப்படவேண்டிய விமான பயண டிக்கட் கட்டணம், பி.சி.ஆர் கட்டணம், ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கான கட்டணம் என்பன தொடர்பில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா விளக்கமளித்துள்ளார்.
போலி வதிவிட வீஸாவை பயன்படுத்தி கட்டார் வழியாக பிரான்ஸ் செல்ல முயன்ற யுவதி பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்காக சென்று நாடு திரும்ப முடியாதிருந்த 100 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் இன்று (14) நாடு திரும்பினர்.
வௌிநாடுகளில் பணிபுரிந்து மீள நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இறுதியாக செய்யப்படும் பிசிஆர் பரிசோதனை எதிர்மறையாக இருப்பின் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் இருப்பது அவசியமில்லை என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் எதிர்வரும் 26ம் திகதி தொடக்கம் வௌிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டுக்கு வர முடியும் என்று சிவில் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
டிசம்பர் 26 ஆம் திகதி முதல் நாட்டில் வணிக மற்றும் விசேட விமான (Commercial & Charter flights) சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக என சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.
தினமும் 500 தொடக்கம் 600 புலம்பெயர் தொழிலாளர்கள் வரை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுத்து வருவதாக இராணுவத தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புலம்பெயர் தொழிலாளர் ஆட்சேர்ப்பு ஆலோசனைக்கான இணையதளம் தமிழ் சிங்கள மொழிகளில் வௌியிடப்பட்டுள்ளது.
வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர தர ஹோட்டல்களில் தனி அறை வாடகை 7500 ரூபா என தெரிவித்த போதிலும் 12,500 ரூபாஅறிவிடப்படுவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
மத்திய கிழக்கு, மாலைதீவு ஆகிய நாடுகளில் சிக்கித் தவித்த 655 இலங்கையர்கள் நேற்றுமுன்தினம் (08) அதிகாலை இலங்கையை வந்தடைந்தனர்.