இலங்கை பெண்ணின் மரணத்தால் ஜப்பான் சட்டத்தில் மாற்றம்
தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்ததையடுத்து எழுந்துள்ள கண்டனங்களையடுத்து, அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட தஞ்சங்கோருவோரை நாடு கடத்துவதை இலகுவாக்குவதற்கான சட்டமூலமொன்று கடந்த செவ்வாய்கிழமை நீக்கிக்கொண்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் யோஷிஹைட் சுகாகேவின் லிபரல் டிமோக்ரடிக் கட்சியினர் புலம்பெயர்வு சட்டத்தை மீள நிறைவேற்றுவதற்கான முயற்சியை கைவிட்டுள்ளதுடன் மூன்றாவது முறை தள்ளுபடி செய்யப்பட்டதன் பின்னர் நாடு கடத்த முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாற்றமானது நீண்டகாலம் அகதி அந்தஸ்த்துக்காக தடுப்பு முகாம்களில் தங்கியிருப்போருடைய பிரச்சினையை தீர்க்கும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது சர்வதேச பிரகடனத்திற்கு எதிரான செயலென்று சட்டத்தரணிகள், சட்டவியலாளர்கள், எதிர்கட்சி சட்டவியலாளர்கள் மற்றும் மனித உரிமைக்குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏனைய அபிவிருத்தி நாடுகளுடன் ஒப்பிடுகையில் தஞ்சம் கோருவோர் தங்குவதற்கான அனுமதியை ஜப்பான் குறைவாகவே வழங்குகிறது.
தற்போது அந்நாட்டில் தஞ்சம்கோரி விண்ணப்பித்துள்ளவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் விண்ணப்பித்தவர்கள் நீண்டகாலம் பல துன்பங்களுக்கு மத்தியில் தடுப்பு முகாம்களில் துன்பப்படவேண்டியேற்படும். எனினும் கடந்த மார்ச் மாதம் ஜப்பான் நகோயா நகர தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த விஷ்மா சந்தமாலி என்ற இலங்கை யுவதியை தஞ்சம் கோருபவர் என்று கூற முடியாது.
33 வயது விஷ்மா சந்தமாலி கற்றல் நோக்குடன் ஜப்பான் சென்றுள்ளார். அவரை அந்நாட்டு அதிகாரிகள் கவனித்த விதமானது அங்குள்ள தஞ்சம் வழங்கல் முறையில் காணப்படும் குறைபாடுகளை சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த ஓகஸ்ட் மாதம் வீட்டு வன்முறை தொடர்பில் முறைப்பாடு செய்ய அவ்விலங்கைப் பெண் பொலிஸிற்கு சென்றுள்ளார். எனினும் வீசா முடிந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்தமை காரணமாக அவர் பொலிஸரால் தடுத்த வைக்கப்பட்டுள்ளார். கொவிட் நிலைமை காரணமா அவருக்குத் தேவையான ஆவணங்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தடை, தாமதங்களை அதிகாரிகளுக்கு சந்தமாலி தெரிவித்தபோதிலும் அவரை விடுதலை செய்ய ஜப்பான் குடிவரவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
அம்முகாமில் இருந்த பல்வேறு இன்னல்கள் காரணமாக குறித்த பெண் முகாமிலேயே இறந்தமை கவலைக்குரிய விடயமாகும்.
Source: Reuters
-Agencies