தாயகம் திரும்பக் காத்திருக்கும் இலங்கையர்களுக்கு நற்செய்தி

தாயகம் திரும்பக் காத்திருக்கும் இலங்கையர்களுக்கு நற்செய்தி

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் பயணிகள் விமான சேவை மீள ஆரம்பமாகவுள்ளது.

சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை இதனை அறிவித்துள்ளது.

எனினும்> 14 நாட்களுக்குள் இந்தியாவிற்கு சென்றவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என அதிகாரசபையின் தலைவர் உப்புல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

விமானத்தில் ஒரு தடவையில் 75 பேர் மாத்திரமே பயணிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடவுச் சீட்டினை கொண்டுள்ளவர்களும் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களும் தாயகம் திரும்புவதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கைக்கு வருகை தரும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா அதிகார சபைக்கு அறிவிக்க வேண்டும் என அதிகார சபை கூறியுள்ளது.

Author’s Posts