இலங்கை உட்பட 5 தெற்காசிய நாடுகளுக்கு தடை- பஹ்ரைன்

இலங்கை உட்பட 5 தெற்காசிய நாடுகளுக்கு தடை- பஹ்ரைன்

கொவிட் 19 தொற்று பரவல் அதிகமாக உள்ள சிவப்பு பட்டியல் நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இலங்கை உட்பட ஐந்து தெற்காசிய நாடுகளில் இருந்து பயணிகள் தமது நாட்டுக்குள் நுழைவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது.

நேற்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேற்கூறப்பட்ட நாடுகளில் உள்ள பஹ்ரைன் குடிமக்கள் மற்றும் வதிவிட அனுமதி விசா பெற்றவர்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் அனுமதி பெறுவதற்காக விமானத்தில் ஏறுவதற்கு 48 மணி நேரத்திற்கு குறையாத பிசிஆர் பரிசோதனை முடிவுகள் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் பஹ்ரனை வந்தடைந்தவுடனும் 10 வது நாளிலும் மீண்டும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வாறு நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாகும்.

சிவப்பு பட்டியல்கள் நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளில் இருந்து பஹ்ரைன் வரும் தடுப்பூசி ஏற்றிய, ஏற்றாத அனைத்து பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு 48 மணி நேரத்திற்கு குறையாத பிசிஆர் பரிசோதனை முடிவுகள் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் பஹ்ரனை வந்தடைந்தவுடனும் 10 வது நாளிலும் மீண்டும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பது கட்டாயமாகும்.

இதேவேளை, சிவப்பு பட்டியலில் சேர்க்கப்படாத நாடுகளில் இருந்து வரும் பஹ்ரைன் வழங்கிய தடுப்பூசி சான்றிதழ் அல்லது பஹ்ரைனில் உள்ள அதிகாரிகளால் தடுப்பூசி சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாடு வழங்கிய சான்றிதழ் வைத்திருந்தால், அல்லது ஒரு பஹ்ரைனுடன் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் கொண்ட ஒரு நாடு வழங்கிய சான்றிதழ் வைத்துள்ள பயணிகளுக்கு தனிமைப்படுத்தப்படுததல், பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளல் போன்றவற்றில் இருந்து விலக்களிக்கப்படுகிறது. உதாரணமாக, ஐக்கிய அரபு இராச்சியம் இம்மாத ஆரம்பத்தில் பஹ்ரைனுடன் “பாதுகாப்பான பயண வழிக்கான” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மேலும், சிவப்பு பட்டியலில் சேர்க்கப்படாத நாடுகளான அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான கனடா, அவுத்திரேலியா, நியுசிலாந்து, தென்கொரிய, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து வருகைத் தரும் தடுப்பூசி வழங்கியதற்கான சான்றிதழ் வைத்திருப்போருக்கும் மேற்கூறப்பட்ட நடைமுறைகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts