சட்ட விரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 30 பேர் கைது

சட்ட விரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 30 பேர் கைது

சமிந்துகம கரையோர பிரதேசத்தில் கடற்படையினரால் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக வௌிநாடு செல்லும் நோக்கில் தங்கியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றும் (13, இன்றும் (13) நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது கடல் மார்க்கமாக வௌிநாடு செல்லும் நோக்கில் தங்கியிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (13) குறித்த பிரதேசத்தில் தற்செயலாக கடற்படையினா் தேடுதல் நடத்தியபோது சட்டவிரோதமாக வௌிநாடு செல்லும் நோக்கில் தங்கியிருந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சிலாபம் பொலிஸாரின் உதவியுடன் இன்று (14) நடத்திய தேடுதலின் போது ஏனையோரும் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம், மட்டக்ளப்பு, முல்லைத்தீவு, மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சட்ட நடவடிக்கை முன்னெடுப்பதற்காக கைது செய்யப்பட்ட 30 பேரும் சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

Author’s Posts