புலம்பெயர் தொழிலாளருக்கான காப்புறுதி- அமைச்சரவை அனுமதி

புலம்பெயர் தொழிலாளருக்கான காப்புறுதி- அமைச்சரவை அனுமதி

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பொருத்தமான காப்புறுதி திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் தொழில் அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஏற்கவே புலம்பெயர் தொழிலாளர்களுக்கான காப்புறுதி்த் திட்டத்தை தயாரித்துள்ளது. காப்புறுதி திட்டத்தினூடாக மரணத்தின் போது 600,000 ரூபாவும் முழுமையாக அங்கவீனமுற்ற நிலையில் ஆகக்கூடிய தொகையான 400,000 ரூபாவுக்குள் நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணியிடங்களில் ஏற்படும் இயந்திரம்சார் விபத்துக்கள் மற்றும் வீட்டுப்பணிகளின் போது ஏற்படும் விபத்துகள், தொழில்வழங்குநர்களினால் ஏற்படும் தாக்குதல்கள் மற்றும் அழுத்தங்களினால் ஏற்படும் உடல் உள பிரச்சினைகளுக்கு இக்காப்புறுதியினூடாக எவ்வித நன்மைகளும் உள்ளடக்கப்படவில்லை என்று தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே குறித்த விடயங்களும் உள்ளடக்கப்படும் வகையில் அமைச்சர் அமைச்சரவை முன்மொழிவை சமர்ப்பித்துள்ளமை குறிபிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image