கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் சடலம் நாட்டுக்கு

கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் சடலம் நாட்டுக்கு

குவைத்தில் பணியாற்றி வந்த நிலையில் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் சடலம் நேற்று (09) நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த நிலையில் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த பணிப்பெண்ணினால் குறித்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித ​ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்று (09) காலை 8.30 மணி அளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
மஹவ பிரதேசத்தை சேர்ந்த 39 வயது பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் குறித்த இலங்கை பணிப்பெண் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நேற்று (09) நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இன்று (10) நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நடைபெற்றது

கடந்த 2019 ஆம் ஆண்டு குறித்த பெண் குவைத் இராச்சியத்திற்கு வீட்டுப் பணிப் பெண்ணாக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image