வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்புவோருக்கான கட்டாய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்வு

வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்புவோருக்கான கட்டாய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்வு

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புகின்றவர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்த்தப்படுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.

 
இதன்படி இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டு 14 நாட்களின் பின்னர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புகின்றவர்கள், பீ.சீ.ஆர்.பரிசோதனையை மேற்கொண்டு கொவிட் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால், அவர்கள் தனிமைப்படுத்தப்படாமல் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.
 
எனினும், தொற்றுறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
 
அதேநேரம், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு இந்த நடைமுறை செல்லுபடியாகாது.
 
அத்துடன், தற்போது கொவிட் பரவலால் இலங்கைக்கு பிரவேசிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பிரஜைகள் மற்றும் குறித்த நாடுகளுக்கு 14 நாட்களுக்குள் பயணித்தவர்களுக்கும் இந்த நடைமுறை செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image