பஹ்ரைனில் வௌிக்கள பணிகளுக்கு தடை!

பஹ்ரைனில் வௌிக்கள பணிகளுக்கு தடை!

ஜூலை மாதம் தொடக்கம் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதி வரை வௌிக்கள பணிகள் அனைத்துக்கும் பஹ்ரைன் அரசு தடை விதித்துள்ளது.

அந்நாட்டு அமைச்சரவை கட்டளை 39/ 2013 அமைய, கோடைக்கால ஆரம்பத்துடன் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

ஆண்டுதோறும் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதம் வழங்கப்படும் இவ்வௌிக்கள பணித்தடையானது நன்பகல் தொடக்கம் மாலை 4.00 வரை தொடரும். , தொழிலாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல், வெப்பச் சோர்வு மற்றும் வெயிலுக்கு எதிராக அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் கோடை தொடர்பான நோய்களைத் தடுத்தல் என்பன இத்தடையின் நோக்கம் ஆகும்.

அத்துடன் வெப்ப அதிகரிப்பு மற்றும் ஈரழிப்பை இழத்தல் போன்றவற்றினால் ஏற்படும் உள்ள பாதிப்புக்களை குறைத்து நாட்டின் மனித உரிமை கொள்கைளை பாதுகாத்து ஆரோக்கியமானதும் பாதுகாப்பானதுமான பணிச்சூழலை உறுதிப்படுத்துவதும் இதன் நோக்கம் ஆகும்.

தொழில் வழங்குநர்கள் மற்றும் தொழிலாளர்கள் குறித்த அரசாணைக்கு இணங்கி செயற்படுமாறு அமைச்சு பிரசார செயற்பாடுகளினூடாக வலியுறுத்தியுள்ளது. மேலும் . கோடை தொடர்பான நோய்கள் மற்றும் தொழில் விபத்துகளிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான தேவைகள் குறித்து தனியார் துறை நிறுவனங்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பு மேற்பார்வையாளர்களுக்கு நிகழ்நிலை தௌிவுப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image