வௌிநாட்டு தொழிலுக்கு செல்லவுள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம்!

வௌிநாட்டு தொழிலுக்கு செல்லவுள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம்!

வௌிநாட்டு தொழில்வாய்ப்பை நாடவுள்ள பிரஜைகளுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்க தீர்மானித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வௌிநாடு சென்று பணியாற்ற விரும்பும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி வழங்குவதன் முக்கித்துவம் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியதையடுத்து அதற்கான ஒப்புதலை தேசிய கொவிட் தடுப்புக் குழு வழங்கியுள்ளது.

அதற்கமைய, தொழில்வாய்ப்பு பெற்று வௌிநாடு செல்வதற்கு அவசியமான தொழில் ஒப்பந்தம், வீசா மற்றும் நியமனக்கடிதம் என்பவற்றை பெற்றவர்கள் மாத்திரம் இத்திட்டத்திற்குள் உள்வாங்கப்படவுள்ளனர்.

முகவர் நிலையங்களினூடாக வாய்ப்பு பெற்று வௌிநாடு செல்லவுள்ளவர்களுக்கு குறித்த முகவர் நிலையத்தினூடாகவும் சுயமாக செல்பவர்கள் நேரடியாக பணியகத்தை தொடர்புகொண்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்ய முடியும்.

தடுப்பூசி வழங்கும் திட்டம் அடுத்தமாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மேலதிக தகவல்களை 1989 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image