மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை வருவதற்கு தற்காலிக தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என கொவிட் 19 தடுப்புக்கான தேசிய நிலையம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் நாட்டுக்கு வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவைக்கு விளக்கமளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன என்று டெய்லி மிரர் செய்தி வௌியிட்டுள்ளது.
நாடு திரும்ப காத்திருக்கும் பெரும் எண்ணிக்கையான இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையளிக்கும் வகையில் இத்தீர்மானம் அமைந்துள்ளது.
ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஜூலை 13ம் திகதி வரை இத்தடை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்படுகிறது
குறித்த நாடுகளில் இருந்து நாடு திரும்பியவரகளில் நூற்றுக்கும் அதிகமானவர்களிடையே கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெய்லி மிரர்