கொரிய தொழிலுக்காக காத்திருக்கும் 5,000 பேர்: அமைச்சரின் அறிவிப்பு இதோ
கொரிய தொழில்வாய்ப்பு கோட்டா குறைடைந்துவிட்டதா என்பது தொடர்பி;ல தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விளக்கமளித்துள்ளார்.
கொரிய தொழில் வாய்ப்புக்கான கோட்டா குறைவடைந்து உள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்படுகிறது. இதன் உண்மைத்தன்மை என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் நேற்று (08) கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவ்வாறானதொரு அபாயமான நிலை ஏற்படவில்லை. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள உலக கொவிட் பரவல் நிலைக்கு மத்தியில் நாங்கள் தற்போது தகமை பெற்ற 5,000 பேரின் பெயர்களை இணையதளத்தில் உள்ளடக்கி உள்ள நிலையில், தொழில் வழங்குனர்களால் அவர்கள் தெரிவு செய்யப்படுவது இடம்பெறுவதில்லை.
எங்களால் தனித்து தொழில் வாய்ப்புக்கு அனுப்ப முடியாது. அந்தப் பக்கத்தில் (கொரிய தொழில்தருநரகள்) தெரிவுசெய்யப்படுபவர்களை மாத்திரமே எங்களுக்கு அனுப்ப முடியும். கொரியாவில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவை குறித்து தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொவிட் பரவல் நிலைமைக்கு மத்தியில் கொரியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமை, இலங்கையில் இருந்து கொரியாவுக்கு சென்றவர்கள் தாங்கள் தொழில் புரிந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்று வேறு இடத்தில் தொழில் புரிவதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
எனவே கொரிய பக்கத்திலிருந்து தொழில் வழங்குநர்கள் இவர்களை தொழிலுக்கு எடுப்பதற்கு இணங்குவார்களாயின் இந்த 5,000 பேரையும் எங்களுக்கு அனுப்ப முடியும். இது கொரியாவில் உள்ள தொழில் வழங்குனர்கள் கைகளிலேயே உள்ளது. எனத் தெரிவித்துள்ளார்.